Saturday, August 2, 2008

குசேலன் ரஜினி நல்லவரா? கெட்டவரா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாகப்பா,இதுல ஒரு சீட்டெடு என்று கராத்தே மணியிடம் ரஜினி கேட்கஏங்கிட்டேயேவா என்று கராத்தே மணி கேட்க உன்னையத்தாண்டா என்று அழுத்தி சொல்லிவிட்டு,எல்லாருக்கும் நாள் குறிச்சீல உனக்கு நான் நாள் குறிக்கிறேன்டா என்றபடி ஸ்டைலாக நடந்து ஒரு உதை கொடுப்பார்.

"அன்புக்கு நான் அடிமை" அந்தப் படத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு இனம் தெரியாதபிடிப்பு அவர் மேல் ஏற்பட்டது.
ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அன்புக்கு நான் அடிமை படத்தை ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு நான்கு முறை பார்த்தேன்,அதிலும் ரஜினி போடும் மான் கொம்பு சண்டையைமறக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தவுடன் ரொம்பவும் சந்தோசமாக இருந்தது.

ரஜினியை
ஒரு தயாரிப்பாளருக்கு பிடிக்கலாம்
ஏன்?
அதில் ஒரு நியாயம் உள்ளது.
ஏனென்றால் தன்னை நம்பி வரும் தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே சம்பாதித்துகொடுப்பதால்.

ரஜினியை
ஒரு இயக்குனருக்கு பிடிக்கலாம்
ஏன்?
ஏனென்றால் ரஜினியை இயக்கிதால் கிடைக்கும் பெருமையால்.

ரஜினியை
ஒரு விநியோகஸ்தருக்கு
ஒரு தியேட்டர் அதிபருக்கு
ஒரு தியேட்டரில் உள்ள கேண்டீன் ஒனருக்கு பிடிக்கலாம்
ஏன்?
ஏனென்றால் இவர்களுக்கும் ரஜினியால் பெருமையும் லாபமும் கிடைப்பதால்.

பணத்தையும் கொடுத்துவிட்டு லாபமும் இல்லாமல் லட்சோப லட்சோபம் பேர், படித்தவர் முதல் பாமரர் வரை ரஜினியை விரும்புவதின் ரகசியம் என்ன?

காரணம்

நாம் நினைத்ததை எல்லாம் செய்து விட முடியாதுகுறைந்த பட்சம் நாம் நினைப்பதை உள்ளது உள்ளபடி பேசக்கூட தயக்கம்,பயம்.அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன சொல்லுவாரோ என்று சதாசர்வகாலமும் பிறரை நினைத்தே நம் எண்ணங்களை வெளிப்படுத்துவதே இல்லை.

நம் கண் எதிரே நடக்கும் சின்னச்சின்ன தவறுகளை தட்டிகேட்க வேண்டும் என்று மனது துடிக்கும் ஆனால் யதார்த்தம் நம்மால் முடியாது.

ஆனால்

ரஜினி திரையில் இதை எல்லாம் வெகு இலகுவாக சாதித்து காட்டுவார்.நியாயத்தை தட்டி கேட்டு அவர் விடும் பஞ்சு டைலாக்கும் அப்படியே மனதில் சென்று தங்கிவிடும்.
சராசரி மனிதனால் முடியாத எதையும் திரையில் ரஜினி சாதித்து காட்டுவதால்தான்பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கிறது.

ரஜினி
என் தைரியத்துக்கு ஒரு காரணம்
என் குரு ஸ்ரீரமண மகரிஷியைக் காட்டியவரும் அவரே
அவரின் எளிமை அனைவரையும் போல் எனக்கும் பிடிக்கும்.

"வாழ்கையில ஒன்னவிட ஒன்னு பெட்டராத்தான் தெரியும் ஆனா நமக்கு என்ன வேணும்னு நாமதான் உறுதியா தேர்ந்தெடுத்தா தான் நம்ம வாழ்கை நல்லா இருக்கும்."

ஜானி படத்தில் தீபாவிடம் ரஜினி கூறும் இந்த வசனம் மனதில் நச்சென்று பதிந்தது. உருவாக்கியவர் இயக்குனர் மகேந்திரனாக இருக்கலாம்,அது மனதில் பதிந்ததற்கு காரணம் ரஜினிதான்.வாழ்க்கைகு தேவையான நல்ல விசயங்கள் பல ரஜினி மூலமே எனக்கு கிடைத்தது.

சோர்வு வரும்போதெல்லாம்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
எங்கிட்ட மோதாத நா ராஜாதி ராஜானடா
பொதுவாக எம்மனசு தங்கம்
மை நேம் ஸ் பில்லா
என் தாயின் மீது ஆனை எடுத்த சபதம் முடிப்பேன்

இந்தப் பாடல்களை கேட்க்கும் போது எங்கிருந்துதான் உற்சாகம் வருமோ?சோர்வுக்கே சோர்வு வந்துவிடும்.

நம்பிக்கை இழக்கும் போதெல்லாம்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
சக்தி கொடு


இந்தப்பாடல்கள் காதில் விழுந்தாலே நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

எங்காவது பயணம் செய்யும்போதோ
இயற்கையுடன் ஒன்றியிருக்கும்போதோ

கண்மணியே காதல் என்பது கற்பனையோ.
பெண்மானே சங்கீதம் பாடிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது.
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்கோலம்
அடி வான்மதி என் காதலி
வெண்மேகம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும் வெள்ளைப் புறா ஒன்று
காத்தோடு பூ உரச
விழியிலே மலர்ந்தது
சகானா சாரல் தூவுதே

இந்தப் பாடல்களை கேட்டால் மனதை யாரோ மெல்லிய மயிலிரகால் வருடி விடுவதைப்போல் இருக்கும். நம்மேல் அன்பு கொண்டவர்களின் அருகில் இருக்கும் உணர்வை இப்பாடல்கள் எனக்கு தருகின்றன. என் மேல் அன்பு செலுத்துவதற்கு யாருமே இல்லை என்ற நிலை வந்தாலும் இப்பாடல்களே எனக்கு துணை என்று இருந்துவிடுவேன்.

கம்பங்கழி தின்னவனும் மன்னுக்குள்ள
தங்க பஷ்பம் தின்னவனும் இந்த மன்னுக்குள்ள

இந்த ரெண்டுவரிய கேட்டாலே வாழ்க்கையில நடக்கற கஷ்டமான விசயங்களஎளிதா எடுத்துக்க முடியும்.

ரஜினிய
அப்பமட்டுமில்ல
இப்பவும் பிடிக்குது
இப்பமட்டுமில்ல
எப்பவும் பிடிக்கும்
ஏன்னா?
அவரோட எளிமை
விடாமுயற்சிநம்பி
வந்தவர்களை கைவிடாத தன்மை
எதிரியையும் நேசிக்கும் பண்பு
அனைவரையும் மதித்து உற்சாகப்படுத்தும் தன்மை.

மொத்ததில் நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு வேண்டிய விசயங்கள்தான் இவை.

இது எளிதில் ரஜினிக்கு வசப்பட்டதால்தான், பெரும்பான்மையானவர்கள் ரஜினிக்கு வசப்பட்ட ரகசியம் இதனால் தானோ?

ஊக்கமது கைவிடேல்




தி வேரியபில்ஸ் படப்பிடிப்பில்
கார்த்திகேய மணிகண்டன்





அர்ச்சுனனுக்கு வில்லு

ஹரிசந்திரனுக்கு சொல்லு



அதுபோல

கார்த்திகேய மணிகண்டனுக்கு

சினிமாவே சுவாசம். யதார்த்தமாய் தொலைபேசியில்தான் எங்கள் அறிமுகம் நடந்தது.என்ன பண்றீங்க என்று கேட்டபோது சவுண்ட் இன்ஞினியரிங் அண்ட் டைரக்ஷன் கோர்ஸ் படிக்கிறேன் என்று சொன்னதும் என்னுள் இருந்த சினிமா கலைஞனும் விழித்துக்கொண்டதால் பரஸ்பரம் சினிமா என்ற ஒத்த வரிசையினால் ஒரு பிடிப்பு ஏற்பட்டது


இடையில் என்னை நேரில் சந்ததித்து அவரின் 8.a.m. என்ற குறும்படத்தின் டிவிடி ஐ கொடுத்து பார்க்கச் சொன்னார். எட்டு நிமிடமே ஒடும் அந்த குறும்படம் ஒருவேலையில்லா இளஞனின் வாழ்வை எந்த வித வசனமும் இல்லாமல் காட்சி அமைப்புகளிலேயே மிக அழகாக பதிவுசெய்திருந்தார்.பார்த்ததும் கண்டிப்பாய் இவர் தமிழ் சினிமாவில் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை வந்தது.


அதற்கு அடுத்தடுத்த சந்திப்புகளில் கார்த்திகேய மணிகண்டனின் அலட்டல் இல்லாத ஆனால் விசய ஞானம் உள்ள சினிமா பார்வையை புரிந்து கொள்ள முடிந்தது.உலக சினிமா பற்றி கூடுதல் தகவல்களையும் அதைப்பார்க்கும் விதம் பற்றியும் அவர்சொல்லும் அழகே தனி.


அவரின் கதை சொல்லும் நேர்த்தியாலும் தொழில் நுட்ப அறிவாலும் கவரப்பட்ட நான்,கார்த்தி எனக்காக ஒரு குறும்படத்தை இயக்கி கொடுக்க முடியுமா? என்று கேட்டபொழுது சார் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறி மிக நிதானமாக தி வேரியபிள்ஸ் என்ற ஸ்கிரிப்டை எழுதிக்கொண்டு வந்த தந்தார்.

இதற்கிடையில் ''பெபிள்'' என்ற DVDஐ கொடுத்து,இந்த படத்தை பாருங்கள்,இந்த படத்தில் கதை சொல்லும் உக்தி முற்றிலும் மாறுபட்டது. மூன்று கண்டங்களில் நடக்கும்நிகழ்ச்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி நான்லீனியர் விதத்தில் கதை சொல்லியிருப்பார்கள் என்று சொன்னார்.



ஐயா கார்த்தி நல்ல நாள்ளேயே ஒரு English படம்கூட பார்த்ததில்ல, ஆனால் சமீபகாலமாகதான் ஒன்றிரண்டு பார்த்து ஏதோ கொஞ்சம் தேறியிருக்கேன்.திடீர்னு மூன்று கண்டங்கற, நான்லீனியர்ங்கற என்னையா இதெல்லாம் என்றேன்.

பயப்படாதீங்க சார் என்று சொல்லிவிட்டு அப்படத்தின் கதையை பத்தே நிமிடத்தில் மிக அழகாக எடிட் செய்து கூறினார்.அதற்கு பிறகு அப்படத்தை பார்த்தேன். உண்மையில்அப்படத்தின் உணர்வுகள் என்னைத் தாக்கியது.

இடையில் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.கார்த்தி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தாய் தன் பிள்ளைகள் மேல் வைத்த காதலைப்போல் அவர் சினிமாவில் வைத்த அன்பு அப்பட்டமாய் தெரிந்தது.

ஸ்கிரிப்ட் ரெடியாயிடுச்சு எப்ப சூட்டிங் வெச்சுக்கலாம் என்று நான் அவசரப்படுத்தய போதும், இல்ல சார் அவசரப்படாதீங்க செலவு குறைக்கிறதுக்கான எல்லா முயற்சியும் ப்ளான் பண்ணிட்டு உங்கட்ட சொல்றேன்.அதன் பிறகு எடுக்கலாம் என்று கூறினார்.


சொன்னபடியே செய்தும் காட்டினார்.மேலும் அந்த பர்ட்டிகுளர் ப்ராஜெட்டில் சினிமா ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அவர்களுக்கு ஒரு பயிற்சி களத்தையும் எனக்கு செலவையும் கம்மிபண்ணிவிட்டார்.

"தி வேரியபிள்" என்ற அந்த குறும்படத்தை நாங்கள் திரையிட்ட இடத்திலெல்லாம் நல்ல அங்கீகரம் கிடைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் "ஜனசக்தி" என்ற தினசரி பத்திரிக்கை இந்த குறும்படத்தை பார்த்து மிகச் சிறப்பான குறும்படம் என்று பாராட்டி கெளரவித்தது மனசுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நண்பர் ரியாஸ், அதற்குப்பிறகு நடிகர் விஜய்நடித்த "அழகிய திருமகன்" என்ற திரைப்படத்திற்கு உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்தார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இவரைப்பற்றி சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.


இந்தக் குறும்படத்தின் மூலம் ஏராளமான திறமை மிக்க இளஞர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் நண்பர் கார்த்தி.


B.E படித்துமுடித்தவுடன் வேலைக்கு செல்வோம் என்று நினைக்காமல், சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு தற்பொழுது சென்னையில் மிகப் பெரிய கட்டுமான நிலையத்தில் சூழ்நிலை காரணமாகவேலை பார்த்து வருகிறார்.ஆனால் அதையும் சிரத்தையோடு செய்கிறார்.


கிடைக்கும் இடைப்பட்ட நேரங்களில் இயக்கும் திறமையையும், ஸ்கிரிப்ட் திறமையையும்விடாமல் செய்து வருகிறார்.சுருக்கமாக சொன்னால் ஒரு கமர்சியலான, எளிமையான,உணர்வுபூர்வமான
உலக சினிமாவை, தமிழில்தரக்கூடிய இயக்குனராக வருவார் என்பதுதிண்ணம்.





கார்த்தி = யதார்த்தமான கதை
அதைப்பிரித்து திரைக்கதை ஆக்கும் திறமை
சாட் பை சாட் விஸ்வல் ட்ராயிங்
அனைவரையும் ஒருங்கினைந்து வேலை வாங்கும் திறமை
இதுவே கார்த்தி