Wednesday, October 22, 2008

பழைய வீடும்... பதிந்த விசயமும்...

சித்தப்பா,பெரியப்பா மக்களுடன் முற்றத்தில் ஓடி விளையாண்ட நாட்களையும்,மழை நாளில் முற்றத்தின் நான்கு விளிம்பிலும்வடியும் மழை தண்ணீரை பித்தளை அண்டாவில் பிடித்து மகிழ்ந்த சந்தோசமும்,தண்ணீரை முற்றத்தில் அடைத்து கப்பல் விட்டு மகிழ்ந்ததும் இந்த வீட்டில்தான்.

பழைய வீடு

பலபேர்களின் ஞாபகங்கள் பொதிந்த வீடு.அதிலொருவர்எல்லெஸ் கனீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர்கருப்பு வெள்ளையில் காவியங்கள் படைத்தவர்புகைப்படத்தில்.

முற்றைத்தை சுற்றியுள்ள அனைத்து அறைகளின் சுவற்றிலும்இவர் எடுத்த புகைப்படங்கள் மிடுக்குடன் காணப்படும்.

ஒவ்வொரு கல்யாண வீடுகளிலும்

அவர் பின்னால் மழலை பட்டாளங்களின்அணிவகுப்பு

இருந்து கொண்டேயிருக்கும்.

ஆர்வமுடன் கேமராவை பற்றி கேட்டால்

வயது வித்யாசம் பார்க்காமல்

கனீர் குரலில் சொல்லித்தருவார்.

அவரும் இருந்தது இந்த வீடு.

கன்னிஅப்பத்தா,

கல்யாணிஅண்ணன்

சேகர்

கண்ணன்

சோமுஅண்ணன்

கனகுஅய்யா

அருணாச்சலம்

ரவி

எல்லெஸ் சுப்பரமணி
இவர்களைத்தவிர பெயர் ஞாபகத்திற்கு வராத இன்னும் பலபேரை மனதில் பதித்ததும் இந்த வீடுதான்.

சினிமா காட்டி மகிழ்ந்ததும்திருமண வீட்டில் தென்னங்குறுத்தோலை பின்னி மகிழ்ந்ததும்கல்யாண வீட்டில் வினோதமான மிசினில் சுற்றி தரும் ஐஸ்கிரீமைஅடித்து பிடித்து ருசித்ததும் இந்த வீட்டில் தான்.

பலபேர் வாழ்ந்த இந்த வீடு பல கலைநயத்தை தன்னுள் கொண்டுள்ளது.அழகிய மர வேலைப்பாடுகள் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்.மேல்மாடியில் உள்ள சுவரோவியங்கள் ஒவ்வொன்றும் உயிரோவியங்கள்.

திண்ணை

முற்றம்

இரண்டாம் கட்டு

நடைப்பாலம்

பந்திக்கட்டு

தோட்டத்துடன் கூடிய கிணற்றடி கொல்லைப்புறம்.

எத்தனையோ தலைமுறைகள்

முளைத்து வேர்விட்டு வளர்ந்த இடம் இந்த வீடு.

இயற்கையின் செல்வங்களாம்தூயகாற்று,

மாசற்ற ஊரணி தண்ணீர்

மலை சூழ்ந்த கோயில் அமைந்த ஊரில்

இந்த வீடு அமைந்துள்ளது.

வாழ்ந்த வீட்டை இந்த நிலையில் பார்த்தபோதுஇனம் தெரியாத சோகம் மனதை தாக்கியது

எதைஎதையோ சாதிப்பதற்காக நாம் ஒடிக்கொண்டே இருக்கிறோம்.அழகிய நிம்மதியான வாழ்க்கை நம் காலடியில் கொட்டிக்கிடப்பதை அறியாமல்

பழைய வீடுஇன்றில்லை

ஆனால் அதில் வசித்த மனிதர்களும் எங்கள் சிறுவயது கல்லமில்லா விளையாட்டுகளும்எங்கள் மனதில் என்றும் நீங்காதிருக்கும்.