Friday, February 19, 2010

பழைய நினைவும்... தஞ்சாவூரும்...











ஊர் சுற்றுவது என்பது ஒரு சுகமான அனுபவம்.அதுவும் நமக்கு பிடித்த ஊரில் என்கிறபோது அதன் மகிழ்ச்சியே தனி.சமீபத்தில் சரித்திர புகழ்மிக்க இராஜராஜசோழன் ஆண்ட தஞ்சைக்கு அடியேன் சென்றேன்.

வானலாவி நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம்,சரஸ்வதி மஹால்,
கரந்தை தமிழ்ச்சங்கம்,சுற்றிலும் ஒடும் ஆறுகளையும் பார்க்க பார்க்க
நம்மை
ஆயிரம் வருடங்கள் முன்னே
பிறந்திருக்க கூடாதா?
என்று மனது ஏங்கியது.

சிவராத்திரி அன்று
காலாற கரந்தையிலிருந்து சரஸ்வதி மஹாலைநோக்கிநடந்தேன்.
இராஜராஜசோழன் இந்த வழியாக தம் படைபரிவாரங்களுடன்வந்திருப்பாரோ?
அந்த காலம் இந்த வீதி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

ஹலோ பாத்துபோங்க சார் என்றபடி ஒரு ஹீரோஹோண்டா பைக்காரர்
அன்பாக ரோட்டைப்பார்த்து போகச்சொல்லி அறிவுருத்த இராஜராஜசோழன் கனவு கலைந்தது.

நினைவில் நான் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் சிவன் எம் சிந்தையை ஆக்கிரமிக்கும் வண்ணம் ருத்ர தாண்டவத்துடன் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளி என்ற விளம்பரபலகையில் அழகே உருவாக காட்சி அளித்தார்.

மேலும் அந்த இசைப்பள்ளியிலிருந்து தமிழ் வேதங்கள் என் செவியில் இன்ப வெள்ளமாய் பாய்ந்தது.




ஆர்வம் கட்டுக்கடங்காமல் போக
ருத்ரன் இசைப்பள்ளிக்குள் நுழைந்தேன். இராஜராஜசோழனின் திருவுருவப்படம் என்னை வரவேற்றது.


சுற்றிலும் சிவபெருமானின்
ஆனந்த திருவுருவப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.


அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகரின்வாசகங்கள் மனதில் பதியும் வண்ணம் எழுதப்பட்டிருந்தன.


அன்றுதான் ருத்ரன் இசைப்பள்ளியின் தொடக்கநாளாம். தமிழ் வேதங்களைப்பாடி யாகம்வளர்த்துக்கொண்டிருந்தனர்.
மனதை மிகவும் கொள்ளைகொண்டன தமிழ் வேதபாடல்கள்.சுற்றிலும் இளம் சிவனடியார்கள் கூட்டம்.

நிர்வாகி திரு இராஜராஜனிடமும் அவரின் இளைய சகோதரர் திரு அருண்குமாரிடமும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
அவ்வளவு விசய ஞானங்களை எளிமையாய் பகிர்ந்துகொள்கிறார்கள்.


இசையின் மேல் உள்ள ஆர்வத்தையும் சிவத்தொண்டில் கொள்ளும் நிறைவையும் அவர்கள் பேச்சில் அறிய முடிந்தது.



நிர்வாகவியலில் முதுநிலைப்பட்டம் பெற்ற இவர்கள் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளியைமிகச்சிறந்த இசைப்பள்ளியாக உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.



இப்பள்ளி தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை தமிழ்ச்சங்கம் அருகில்அமைந்துள்ளது.






பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறுநூறாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்கள் ஆவரே
-திருநாவுக்கரசர்

பூவனூர்ப் புனிதரின் (சிவபெருமானாரின்)திருநாமமாகிய திருஐந்தெழுத்தினை (சிவாயநம) ஒரு கோடி வரைச்சொல்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்,

தேவர்களின் தலைவனாகிய இந்திரனைவிடப் பெருஞ் செல்வம் உடையவர்கள் ஆவார்கள்.

என்ற திருநாவுக்கரசர் பாடலுகேற்ப சிவநாமம் ஒலிக்கும் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளியும் பெரும் செல்வம் அடையும்என்பது திண்ணம்.


Monday, February 1, 2010

சித்தர் பூமி திண்டுக்கல்லில் பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்குஒரு ஆஸ்ரமம்....








திண்டுக்கல்
சித்தர்களும்,
ஞானிகளும் வாழும் பூமி.
இந்த திண்டுக்கல்லில் ஞானிகளும் வணங்கும்பெருமை பெற்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி

1890ம் ஆண்டு தனது 11ம் வயதில் 1வருடம்
இங்குள்ள
நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
படித்தது
திண்டுக்கல்லுக்கு பெருமை.

அந்த நாளில் மாலை வேளைகளில்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி
பத்மகிரி மலையைச் சுற்றி
ஆடிப்பாடி விளையாடி உள்ளார்.

திண்டுக்கல் கோவில் தெருவில்
அவருடைய உறவினர் வீட்டில் வசிக்கும் போதுஅடிக்கடி உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.

சிலசமயங்களில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பஉறவினர்கள் நையப்புடைந்தும் உள்ளனர்.

ஊமைத்துரை சுரங்கப் பாதையில் நண்பர்களுடன்
விளையாண்ட அனுபவத்தை பகவான் ஸ்ரீரமண மகரிஷி பின்னாளில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருக்கும்போது
திண்டுக்கல்லில் இருந்து வரும் அன்பர்களிடம் பகிர்ந்துகொள்வாராம்.

யூதர்கள்
உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளியாக
அறியப்படுபவர்கள் யூதர்கள்.
ஏன்,எதற்கு,எப்படி?என்று கேள்விகளால்
துளைக்கும்
யூதர்களே
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்
நான் யார்?தத்துவத்தில் மனம் அடங்கி
பகவானை கொண்டாடுகின்றனர்.

பகவான் பிறந்த இடம்
திருச்சுழி
பகவான் வாழ்ந்த இடம்
மதுரை
அடங்கிய இடம்
திருவண்ணாமலை
இந்த மூன்று இடங்களையும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்
வந்து பார்த்து தரிசித்து
தங்கி செல்லும்படிஆசிரமங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி
வாழ்ந்து
படித்து
விளையாடிய
சிறுமலை சூழ்ந்த திண்டுக்கல்லிலும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்வந்து பார்த்து தரிசித்து தங்கி செல்லும்படி
ஒரு ஆசிரமம் அமைக்கும் பணியைபகவான் அருளால் தொடங்கி உள்ளோம்.

2009ம் வருடம் பிப்ரவரி மாதம் 1ம் தேதிஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்குபகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளிய ஸ்ரீஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக அன்பர் இல்லத்தில்நடைபெற்றது.

அதன் பிறகு பிரதி வாரம் ஞாயிற்று கிழமைதோறும்
அன்பர்கள் இல்லத்திலும்
திருக்கோவில்களிலும்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளியஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக தொடர்ந்து பகவான்அருளால் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாத கார்த்திகை நாள் அன்றும்இல்லாத ஏழை எளியவர்களுக்குஅன்னதானம் பகவான் ஸ்ரீரமண மகரிஷிஅருளால் வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும்நல்ல விசயங்களை போதிப்பதற்காகவும்ஸ்லோகங்களை கற்றுக்கொடுக்கவும் ஸ்ரீரமணாச்சல குருகுலத்தை பகவான்அருளால் நடத்தி வருகின்றோம்.

உலகமெங்கும் உள்ள
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்அடியார்களின்
அன்பும், ஒத்துழைப்பும் இருந்தால்
மிகச்சிறப்பாய்
திண்டுக்கல் ஸ்ரீரமணாச்சல ஆஸ்ரமம் அமையும் என்பது திண்ணம்.

அருணாச்சலம் வாழி, அன்பர்களும் வாழி
அட்சரமணமாலை வாழி.