Wednesday, November 19, 2008

பரத் நடிக்கும் நாட்டுக்கோழி...



சேவல்

இந்த பெயரை இப்பொழுது கேட்டால்
குலை நடுக்கம் எடுக்கிறது.

போன ஞாயிறு அன்று என்ன செய்வது என்றே தெரியவில்லை
சரிதான் என்று 2ரூபாய்க்கு வேர்கடலை வாங்கி ஓவ்வொன்றாய்
வாயில் போட்டபடி நடந்தேன்

பொதுவாகவே கிறுக்காக சுற்றும் நான் அன்று வெகு கிறுக்காக திரிந்தேன்.
கடலை தீர்ந்தவுடன் நடையை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்,சேவல் படப்போஸ்டரில்
சிரித்துக்கொண்டிருந்த சிம்மரனைப் பார்த்தவுடன் படம் பார்க்கலாமே என்று மனம்
சொல்ல,பைக்குள் கையைவிட்டேன் ஒரு 50 ரூபாய் நோட்டும் இரண்டு 20 ரூபாய்
நோட்டும் இருந்தது.

கவுண்டர் அருகில் சென்று டிக்கெட் விலையை கேட்ட போது 2 கிலோ அரிசியின்
விலையை(கலைஞர் கொடுக்கும் அரிசியின் விலை அல்ல) அதிர்வில்லாமல் சொன்னார்கள். அப்பொழுதாவது இந்த மரமண்டைக்கு உரைத்ததா என்றால் அதுவும் இல்லை.

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் 40 படியை அனாவசியமாய்
கடந்து(எட்டாவது படிக்கும் போது ஓட்டப்பந்தயத்தில் நடந்து போனது தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வந்தது) தியேட்டருக்குள் நுழைந்தால் எண்ணி 20 பேர் மட்டுமே
இருந்தார்கள்.

அமர்ந்திருந்த சில பேர் கதவு திறந்தபோதெல்லாம் தென்னாப்பரிக்காவில் இருந்து
வந்த மனிதரைப் பார்ப்பதுபோல் வந்தவர்களை பார்த்தது வேறு திகிலடித்தது.
ஒரு வழியாக என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பின் சீட்டில் இருந்து ஓரு கை
என்னை தட்ட ஓரு மார்க்கமாக திரும்பினேன், பத்தாயிரம் சேவல்கள் ஓன்றாக கொத்தினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது தியாகுவை பார்த்த போது.

தியாகு முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு 3 வருடமாக இதோ அதோ
என்று பல திரைக்கதைகளை மிக அழகாக கூறியவர். வாங்கண்ணே இங்க வந்து
உட்காருங்க என்று அன்பொழுக கூப்பிட்டார். அவரால் அப்படி கூப்பிட முடியும்
ஏனென்றால் அவர் வாங்கியவர். அறம் செய்ய விரும்பு,றுவது சினம் என்று
என்னால் இருக்க முடியவில்லை.

சினிமாவைவிட நிஜத்தில் நன்றாக நடித்தால்தான் வாழவே முடியும் போல் இருக்கிறது.
அன்றலர்ந்த தாமரைபோல் (கஷ்டப்பட்டு) முகத்தை வைத்துக்கொண்டு அங்கவிட
இந்த சீட் வசதியாய் இருக்கு என்றபடி முன்னே திரும்பி அமர்ந்தேன்.

திரையில்
சேவல்
என்று ஓளிர்ந்தது
அதற்கு பிறகு
அதைப்பார்த்த அனைவருக்கும்
சித்தம் கலங்கியிருக்கும்
என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை.

சில காட்சிகள் நம் சித்தத்தை
கதிகலங்க வைத்துவிடுகின்றன.

எவ்வளவோ அழகான திரைப்படங்கள் சிறிய நாடுகளில் இருந்துகூட
உலகம் வியக்க தயாரிக்கப்படுகின்றன.
சமீபத்தில் ஹிந்தியில் பூத்நாத் என்று ஓரு அழகான திரைப்படம் வந்தது.
இறந்த ஓரு பெரியவரின் வி அந்த வீட்டிற்கு குடி வந்த சிறுவனின் அன்புக்கு
அடிபணிந்து தனக்கு வருத்தத்தை அளித்த ஓரே பையனை மன்னித்து ஏற்றுக்
கொள்ளும் விசயத்தை வெகு நேர்த்தியாக படமாக்கியிருந்தனர்.

சில காட்சிகளில் கண்ணீர் நம்மையும் அறியாமல் கண்களை குளமாக்கியது.
அமிதாப்பின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு சிறப்பு.

சேவல் புடித்த நேரம், என் நண்பருக்கு பரபரன்னு
ஓரு படம் எடுக்க சை வந்திருச்சு.
பரத் டேட்ஸ் கிடைச்சுருச்சுன்னா
படத்த ரம்பிச்சுரலாம்னு இருக்கார்.

படத்தோட போஸ்டர் டிசைன் ரெடி
பேசனுக்காக மொட்டையடிச்சிருக்காங்க கதாநாயகி
அவளுக்கு விக்கு வச்சு அசிங்க படுத்தின வில்லன
எப்டி பரத் பழி வாங்கி கதாநாயகியின் விக்க புடிங்கி தாமிரபரணி த்துல
வீசி எறிஞ்சுட்டு பேண்ட்ட கிழிச்சு தூக்கி கட்டிகிட்டு வர்றதோட படம் முடியுது.


இதுக்கு ஏங்க நாட்டுக்கோழின்னு பேரு வச்சீங்கன்னு கேட்டேன்
கதாநாயகி விக்க ஈஸியா கழட்டமுடியாதபடி வில்லன் ஓரு சொலூசனப்போட்டு
ஓட்டியிருக்கார்,அதனால பரத் ஒரு கோழிக்கடையில சோகமா உட்கார்ந்திருக்கும்
போது, அந்த கடையோட ஓனர் வடிவேலு நாட்டுகோழிய உரிக்கரதக்காக
நெருப்புல சுட்டு வாட்றார் மின்னலென ஐடியா உதிச்சு கதாநாயகி விக்க பரத்
உருச்சு எறியுறார்.

ஹா பேர்ப்பொருத்தம் அட்டகாசம்தான் போங்க
மறந்துறாம நாட்டுக்கோழிய பார்த்து மகிழுங்க.