Monday, September 24, 2007

கடலை வண்டி



"என்ன வயசுங்க..?"

"அது ஆச்சு 72.." என்று கடலை வறுத்தபடியே சொன்னார் பெரியவர்.

"ஏன் இந்த வயசுல இப்படி க‰டப்படுறீங்க..?"

"இதுதான் எனக்கு ரொம்ப சந்தோசம் தருது.." என்ற பெரியவரை ஆச்சரியமாய் ஏறிட்டேன்.

"3 பசங்க, ஒரு பெண்பிள்ளை எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். கடைசி பயனுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச §ƒ¡ட்டோட என் பொண்டாட்டி நிம்மதியா கண்ணை மூடிட்டா. என் பசங்களும் நல்லாதான் கவனிகறாங்க, மருமகமார்களையும் ஒரு குறை சொல்லமுடியாது. உழச்சு பழகுன என் உடம்புக்கு சும்மா இருக்க முடியல, அதான் இப்படி கடலை வண்டியை தள்ளிட்டு வந்தர்றேன். ஆண்டவன் புண்ணியத்துல உங்கள மாதிரி நிறைய பேர் தாயாபுள்ளையா பழகிட்டாங்க, மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.." என்று சொல்லியபடியே ஒரு பொட்டலத்தை எடுத்து ஏக்கமுடன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியம்மாவிடம் "இந்தாம்மா சாப்பிடு.." என்று கொடுத்தார்.

ஆயிரம் வாட்Š பல்ப் போட்டமாதிரி அந்த அம்மாவின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம்.

ஆச்சரியத்துடன் பார்த்த என்னிடம் "என்னமோ பெரிசா நா செஞ்சுட்டதா நினைக்காதீங்க ஏதோ என்னால முடிஞ்சது" என்று கூறியபடி, வண்டியைத் தள்ளியபடி 'டக..டக..' என்று கடலை வறுத்தபடி நகர்ந்து சென்றார்.

அவர் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஏதோ ஞானம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது.

நிறைய இருந்தால்தான் கொடுப்பேன் என்பதைவிட இருப்பதில் கொடுப்பது எவ்வளவு பெரிய விசயம்.

எவ்வளவு எளிமையாய் மகிழ்ச்சியின் தத்துவத்தை கூறி சென்று விட்டார்.

பெரிதாய் பிறருக்கு உதவி செய்த நினைப்பிலிருந்த எனக்கு சுரீரென்று இருந்தது.

Friday, September 21, 2007

சொக்கனின் புகைப்படங்கள்



சொக்கையா

உன்னிடம் உள்ளது

புகைப்படக் கருவியா? இல்லை,

உணர்வுகளை

உலுக்கும் கருவியா?


ஒவ்வொன்றும்

ஒவ்வொரு

கதை சொல்லும்

அழகுதான் என்னே...


சத்தியமாய் சொல்கிறேன்..

உணர்வுகளை

படம் பிடிப்பதில்

ஒப்பற்றவனய்யா நீ...


24 பிரேமில் ஒடும்

படத்தைவிட

உன் ஒரு பிரேம் படம்

நச்சென்று

மனதை தைக்கும்

அதிசயம்தான் என்ன...?



http://www.flickr.com/photos/chocks/page2/




See CHOCKA s Great Pesum padagal

Tuesday, September 18, 2007

எது ஆன்மீகம்..?


முருகா... ஞானபண்டிதா...

என்னோட சின்ன ஆசையை நிறைவேத்துப்பா.

இருக்குறதற்கு 2400 சதுர அடியில ஒரு ப்ளாட், அதுல சின்னதா 1000 சதுர அடியில ஒரு வீடு. அப்புறம் அங்க, இங்கே போறதுக்கு சின்னதா ஒரு மாருதி Zen ன் கார் போதும்பா.

என்ன உலகமெல்லாம் தொடர்பு கொள்ள என் 72 மாடல் செல்போனும், சோனி லேப்டாப்பும் வேணும்னு உனக்கே தெரியும். எல்.என்.டி கம்பெனி Share-ர்ல ஒரு 2000ம், மியுச்சுவல் பண்டுல ஒரு 4 லட்சமும் போதும்.

சிட்டிக்கு நடுவில் மாசம் ஒரு லட்சம் வாடகை வர்ற மாதிரி இருந்தாத்தானே சொந்தக்காரங்க மதிக்கிற மாதிரி இருக்கும்.

அப்புறம் பொண்ணுக்கு நல்ல அமெரிக்க மாப்பிள்ளையும், பையனுக்கு உலகம் முழுவதும் சுற்றி வந்து சம்பளம் வாங்கற மாதிரி ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில வேலை கிடைச்சா போதும்பா....

நம்மில் பலர் ஆன்மீகம் என்ற போர்வையில் நம் பேராசைளை கடவுள் முன் வைக்கிறோம். நம் மனசாட்சியை தொட்டு உண்மையாக கேட்டால், நமக்கே தெரியும் நாம் உண்மையாய் இல்லை என்று.

நம்மில் முழ்கி மனமுருக அனைவரின் நலத்திற்காக வேண்டுவதையே இறைவனும் விரும்புவார். இல்லாதவற்கு இரங்குவோம்.

நம் கண்ணுக்கு தெரிந்து உண்மையிலேயே கஷ்டப்படும் சகோதர, சகோதரிகளின் படிப்பிற்கு உதவுவோம். தான் தன் குடும்பம் என்பதோடு சிறிதளவேனும் பிறருக்கும் உதவுவோம் மனிதநேயத்தை உயிர்த்தெழ செய்வோம்.

ஆன்மீகம் என்பது வேண்டுவதல்ல, கொடுப்பது.

அன்புடன்

பிஎல்.முத்தையா

Saturday, September 15, 2007

தனிமை - குறும்படம்

lhttp://www.youtube.com/watch?v=Zxz1thWPHkE


. 'தனிமை'
மாறிவரும் சூழ்நிலைகளில்ஆண்களும் பெண்களும் பணத்தைக் குறிவைத்து தங்களது வாழ்க்கையோடில்லாமல் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். இத்தகைய சூழலில் சென்றத் தலைமுறையினரைப் பற்றிய நினைவு ஏற்படுமா? யோசிக்கத் தக்க விசயம்தான்.

வயோதிகத்தில் தனிமையில் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் ஆணின் நிலையைக் குறிப்பிடும் வகையில் வந்துள்ள குறும்படம் தான் பி.எல் முத்தையா கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள 'தனிமை'. உரையாடல்கள் இல்லாமல் இரண்டரை நிமிடமே திரையில் ஒடக்கூடிய இந்த குறும்படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிக்கையிலடங்காது.

செட்டிநாட்டு கலாச்சார அமைப்புள்ள பெரிய வீட்டினுள் தனிமையில் தன்னுடைய வயோதிகத்தைக் கழிக்க நேரும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சொக்கலிங்கம் செட்டியார் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளார்.

கதவு திறக்கிறது, கதவின் தாழ்ப்பாள், வீட்டின் விளக்கு முதலியவை டி அடங்குகிறது. மாத்திரை, மருந்து, மூக்குக்கண்ணாடி இவைகளைத் தொடர்ந்து வயதான சொக்கலிங்கம் காட்டப்படுகிறார். தொடர்ந்து நகரும் திரை நம்மை அவரின் இளமைக்கால புகைப்படங்கள்,மனைவி சொந்த பந்தங்கள்,வாரிசுகள், நண்பர்கள் ஆகியவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின்பால் நம்மை இட்டுச் செல்கிறது.சாப்பிடாமல் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவு, தொடர்ந்து வானத்தை வெறிக்கும் சொக்கலிங்கம் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து பின்பு விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கும் சொக்கலிங்கம் என்று 'தனிமை'யின் ஏக்கத்தை பலவிதங்களில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி வாழ்ந்து வந்த தன்னுடைய மனைவி மற்றும் சுற்றத்தார் அனைவரும் தன்னைவிட்டு நீங்கிய நிலையில் பழையக் காலங்களை அசைப்போட்டபடி எத்தனை நாட்களைத்தான் கழிப்பது என்ற ஏக்கம் சொக்கலிங்கத்தின் நடிப்பில் எதிரொலிக்கிறது. அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்.

சொக்கலிங்கத்தின் இளமைக்காலப் புகைப்படத்தைக் காட்டிய இயக்குர்.உடனே தற்போதைய நிலையையும் காட்டியுள்ளவிதம் குறித்தற்குரியது. இளமைப் புகைப்படத்தில், அதற்கேயுறிய பெருமிதம் மேலுற தெரியும். அவரின் தற்போதைய நிலையில், ஆற்றாமையும்,இயலாமையும் வெளிப்படும் விதத்தில் படமாக்கியுள்ள விதம், சிறிய இடங்களிலும் தன்னுடைய கவனங்களை சிதறவிடாமல் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்று.

தொடர்ந்து உதாசீனத்திற்கு ஆளாகும் வயதானவர்களைக் குறித்த பதிவுகள் நமது கலையுலகத்தில் மிகவும் குறைவு.'தனிமை' போன்ற பதிவுகள் இளைஞர்களின் மனோபாவத்தை மாற்றக்கூடியது. உணர்வுரீதியாக இயக்கியுள்ள பிஎல்.முத்தையாவிற்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது.


தாமரை டிசம்பர் 07 இதழில் மேற்கண்ட விமர்சனத்தை எழுதி பெருமைப்படுத்திய தீபா ஸ்ரீராம் அவர்களுக்கும்,பதிப்பித்த
ஆசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

Friday, September 14, 2007

People short movie

http://www.youtube.com/watch?v=UVdBX4Ndm7g

My short films (sri play)

http://www.youtube.com/watch?v=QQpD_s8YdBM