Showing posts with label அனுபவங்கள்.... Show all posts
Showing posts with label அனுபவங்கள்.... Show all posts

Wednesday, July 23, 2008

ஆனந்த விகடனை ஆர்வத்துடன் பார்த்தேன்...


புது விகடன் பளபளப்பாக இருந்த அளவுக்கு விசயம் உள்ளதாக இருக்கிறதா என்றால் ம்ம்ம்ம்... சந்தேகம்தான்.

93ம் பக்கத்தில் சாட்டடேஇரவு இளம் பெண்கள் எந்த எந்தநட்சத்திர விடுதிகளில் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டமாய்இருக்கலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார்கள்.பிரசுரித்திருந்த படங்களும் உண்மையில் நாம் படிப்பதுவிகடன்தானா? என்ற சந்தேகம் எழுந்தது.

யூத் ஸ்பெசல் கேள்வியும் நானே பதிலும் நானே
போன்றவைகள் நன்றாய் இருந்தது.
(அதிலும் அசைவம் ஜாஸ்திதான்).

30 லிருந்து 40 வயதிற்குள் உள்ளவர்களால்குடும்ப பொறுப்புகளினால் வார,மாத பத்திரிக்கைகளைபடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது போல,இளைய தலைமுறையினரும் படிக்கும் பழக்கத்தையேமறந்துவிட்டனர்.

உணர்வுகளை கொட்டியெழுதும் கடிதங்களேஇன்றைய தலைமுறை மட்டுமல்லயாவரும் மறந்த நிலைதான் தற்சமயம் உள்ளது.

என்ன ரமேஷ்?

என்று எடுத்த எடுப்பிலேயே பெயரைச் சொல்லி விடுகிறார்கள் இருக்கும் கொஞ்சநஞ்ச சுவாரஷ்யமும்போய்விடுகிறது அலை பேசியில்.

விகடன் முற்றிலும் இளயதலைமுறையினரைசென்றடையவேண்டும் என்ற நோக்கில் லேஅவுட் முதல் விசயங்கள் வரை மாற்றியுள்ளார்கள்.

இன்டர்நெட் யுகத்தில் இருக்கும் இளயதலைமுறையினரைஇந்த புதிய விகடன் கவருமா?நடுத்தர வயதில் உள்ளவர்களையும் தக்கவைத்துக்கொள்ளுமா?

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Saturday, July 19, 2008

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனும்...ஆனந்த விகடனும்...

இவன 2 மணிநேரம் வச்சுக்க முடியுமா?

என்று என் இல்லத்தலைவி கேட்க,

ஏம்மா?

நாங்க ரெண்டு பேரும் சுப்பையர் சத்திரத்தில் சுந்தர ராம தீட்சிதரின் இராமாயண சொற்பொழிவை கேட்க போறோம் என்றனர்.

முடியாது என்று சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதா?

புன்சிரிப்புடன் சரி என்று தலையாட்டினேன்.


திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசன்


அப்பா..பா..பா..
திறந்த வெளியில் கிடைத்த சந்தோசத்தில் என் புத்திரன் தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து ஆனந்த கூச்சலிட்டான்.

அவனின் அளவு கடந்த ஆற்றல் என்னை,
2 மணிநேரம் இவனை எப்படி சமாளிக்கப்போகிறோமோ?
என்று பயம் கொள்ளவைத்தது.

ப்ளாட் பார்ம் டிக்கட் எடுத்துக்கொண்டு 2 வது ப்ளாட் பாரத்தில் பைய நடையைக்கட்டினோம்.

தூத்துக்குடி மைசூர் எக்ஸ்ப்ரஸ் மற்றும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்வரும் நேரமாதலால் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருந்தது.

என் பையனுக்கு தண்டவாளத்தைப் பார்த்ததுமே குஷி வந்துவிட்டது.கூடியிருந்த பயணிகளையும்,அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டே வந்தான்.

இரட்டை மனநிலையில் இவற்றைக் கவனித்துக்கொண்டே
வந்த நான் அங்குள்ள புத்தகநிலையத்தில் அழகுற தொங்கிக்கொண்டிருந்த புது வடிவமைப்பில் உள்ள
ஆனந்த விகடனை ஆர்வத்துடன் பார்த்தேன்...

மீதி அடுத்த பதிவில்.

Sunday, July 13, 2008

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில்...


திருச்சி... திருச்சி... திருச்சி... என்று அடித்தொண்டையில் கத்திக்கொண்டிருந்தான் அந்த சொகுசு பஸ்ஸின் ஏஜெண்ட்.

அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு வந்திறங்கிய ஸ்ரீராம் நேரே அந்த ஏஜெண்டிடம் திருச்சிக்கு எவ்வளவுப்பா?

அந்த நிமிடமே கிளம்புவதுபோல் கடந்த ஒரு மணிநேரமாக உறுமிக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஸ்ரீராமைப்பார்த்ததும் ஒரு ஸ்பெசல் உறுமல் உறுமி லேசாக நகர்ந்தது.

என்ன சார் நீங்க... சீக்கிரம் ஏறுங்க 350ரூபா தான் என்று அவசரப்படுத்தினான் ஏஜெண்ட்.

இடியே விழுந்தாலும் சிறிதுகூட பதற்றப்படாத ஸ்ரீராம், கொஞ்சம்கூட முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் இருந்தான்.

பாதி இட்லி உள்ளேயும் மறு பாதி இட்லி வாய்க்கு வெளியேயும் இருந்தபடி பதறிவரும் பயணிகளை ஏமாற்றி அவர்களின் பதற்றத்தையும் அவசரத்தையும் காசாக்கியே பழகிப் போன ஏஜெண்டுக்கு ஸ்ரீராமின் உணர்ச்சி காட்டாத முகத்தைப்பார்த்ததும் பார்ட்டி மிஸ்ஸாயிடுமோ என்ற பயம் கிளம்பியது.

இண்டர்நேசனல் ஏர்ப்போட்டிலேயே ப்ளைட்டில் குத்தாலம் துண்டைப்போட்டு இடம் பிடித்து பக்கதில் உள்ள பிகரிடம் தங்கமணி கடலை மிட்டாயைக்கொடுத்துவிட்டு ஏர்கோஸ்டஸ் பிகருக்கு கொடுத்த பாரின் சாக்லேட்டை அமுக்கியவன் ஸ்ரீராம்.

அதுமட்டுமல்ல லண்டனுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது தேம்ஸ் நதிக்கரையில்ஆப்பம் சுட்டு வித்து ஆயிரம் பவுண்டை அனாவசியமாய் சம்பாதித்தவன். அமெரிக்காவில்நடுரோட்டில் நுங்கு வண்டி ஒட்டி வெள்ளைக்காரிகளை அலற வைத்தவன்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நண்பர்களை டூர் கூட்டிபபோகிறேன் என்று சொல்லி 4000ரூபாய் வசூலித்துவிட்டு நண்பர்கள் நால்வரையும் குதிரை வண்டியில் ஏற்றினான்.


அதில் ஒருவன் சந்தேகத்துடன் ஏம்பபா ஏ.சி வண்டியிலேல கூட்டிப்போறேன என்றதற்கு இன்னொருவன் நல்லா பார்றா நாலாபுறமும் திறந்திருக்குல்ல,ஏதோ இந்த டூர்ல உதைக்கிதே என்றவனை குதிரைப்பக்கத்திலே உக்காந்தா உதைக்காம முத்தமா குடுக்கும் என்றான். சலனமே இல்லாமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீராம் இறங்குங்க இறங்குங்க ஸ்பாட் வந்திருச்சு என்றான்.

முதலில் குதிரை வண்டியிலிருந்து குதித்த ஒருவன் சடாரென்று மயங்கி விழுந்தான் அவனின் 95கிலோ எடை அடுத்து குதித்தவனின் காலைப்பதம் பார்க்க அந்த ஏரியாவே குலுங்க முருகா என்று அலறினான்.


மயங்கி விழுந்தவன் லேசாக திரும்பி அங்கதாண்டா வந்திருக்கோம் என்றான். குதிரை வண்டியின் முன்னால் உட்கார்ந்திருந்தவன் லேசாக எம்பிப்பார்த்தான், பார்த்த வேகத்திலே உள்ளே இருந்தவனிடம் உச்சஸ்தனியில் மாப்ளேளள...இது திருப்பறங்குன்றம்டா.. அவன் கத்திய வேகத்தில் குதிரை பயத்தில் மிரண்டு பஞ்சாய்ப்பறந்தது.

அதுவரையில் தெழுங்கு படத்தில் மட்டுமே ஸேஸ் சீன்களைப் பார்த்துப்பழகிய அவர்களுக்கு நிஜத்தில் நடக்கும் இந்த ரேசால் அவர்கள் இதயம் லப் டப் லப் டப் என்று உதறியது.


அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு குதிரை பக்கத்தில் உள்ள பாத்திரக்கடையில் அவர்களை தள்ளியது.

இப்படியாக திருப்பறங்குன்றத்திற்கு டூர் கூட்டிசென்று வாழைப்பழமும் தேங்காயும் வாங்கிக்கொடுத்துவிட்டு இந்தாங்கடா டூர் செலவு போக மீதி 2.50பைசா என்றவனை கடுப்புடன் இது உனக்கே நல்லாயிருக்கா? என்றவனிடம் என்னபண்றது குதிரை வண்டிக்கு வாடகை 250ரூபா தான்.. ஆனா குதிரைக்கு வைத்தியத்திற்கும்,வண்டி ரிப்பேர் செலவுக்கும் 3737.50பைசா ஆயிருச்சு என்று சொல்லிவிட்டு, இதற்கு பிராயசித்தமா அடுத்த மாசம் உங்க எல்லாரையும் குற்றாலம் கூட்டிட்டு போறேன் என்றதைக்கேட்டதும், அலறி ஒட்டம் பிடித்தனர்.

சார்ர்.. ஏர்ரீங்களா இல்லையா? என்ற ஏஜெண்டிடம் 50ரூபாதானப்பா திருச்சிக்கு

என்ன சார் நீங்க... படிச்சவர் நீங்களே இப்படி பேசினா எப்படி சார்... என்று இழுத்தான்.

இது சீசனே இல்லாத டைம், எப்படியும் பத்து பேர்தான் உள்ள இருக்காங்க, நா வர்றதால உங்களுக்கு லாபம்தான் என்ன சொல்ற என்றான்.

அப்படி இப்படிப் பேசி முடிவில் 100ரூபாய்க்கு ஒத்துக்கொண்டான்.
சந்தோசமாய் பஸ்ஸின் உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்து அருகே திரும்பிப்பார்த்தான், டேய் சந்தோஷ் என்று மகிழ்ச்சியாய் கத்தினான். 95கிலோ எடையுள்ள சந்தோஷ்சும் டேய் மச்சான் எப்டிடா இருக்க என்று பல கதைகள் பேசி மகிழ்ந்தனர்.

திருச்சிக்கு எவ்வளவு ரூபாடா கொடுத்த என்ற ஸ்ரீராமிடம் 350ரூபா தான் கொடுத்தேன் என்றான் சந்தோஷ்.
ஏமாந்துட்டியேடா மச்சான் நான் 100ரூபா தான் கொடுத்தேன்,


அதற்கு பிறகு ஸ்ரீராம் பேசிய எந்த வார்த்தையும் சந்தோஷ்ற்கு கேட்கவே இல்லை.

முன் சீட்டில் உள்ள ஒருவர் ஆஆஆ...என்று அலறினார் காரணம் அவர் 450ரூபா கொடுத்ததினால் என்ற விசயம் இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.