முருகா... ஞானபண்டிதா...
என்னோட சின்ன ஆசையை நிறைவேத்துப்பா.
இருக்குறதற்கு 2400 சதுர அடியில ஒரு ப்ளாட், அதுல சின்னதா 1000 சதுர அடியில ஒரு வீடு. அப்புறம் அங்க, இங்கே போறதுக்கு சின்னதா ஒரு மாருதி Zen ன் கார் போதும்பா.
என்ன உலகமெல்லாம் தொடர்பு கொள்ள என் 72 மாடல் செல்போனும், சோனி லேப்டாப்பும் வேணும்னு உனக்கே தெரியும். எல்.என்.டி கம்பெனி Share-ர்ல ஒரு 2000ம், மியுச்சுவல் பண்டுல ஒரு 4 லட்சமும் போதும்.
சிட்டிக்கு நடுவில் மாசம் ஒரு லட்சம் வாடகை வர்ற மாதிரி இருந்தாத்தானே சொந்தக்காரங்க மதிக்கிற மாதிரி இருக்கும்.
அப்புறம் பொண்ணுக்கு நல்ல அமெரிக்க மாப்பிள்ளையும், பையனுக்கு உலகம் முழுவதும் சுற்றி வந்து சம்பளம் வாங்கற மாதிரி ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில வேலை கிடைச்சா போதும்பா....
நம்மில் பலர் ஆன்மீகம் என்ற போர்வையில் நம் பேராசைளை கடவுள் முன் வைக்கிறோம். நம் மனசாட்சியை தொட்டு உண்மையாக கேட்டால், நமக்கே தெரியும் நாம் உண்மையாய் இல்லை என்று.
நம்மில் முழ்கி மனமுருக அனைவரின் நலத்திற்காக வேண்டுவதையே இறைவனும் விரும்புவார். இல்லாதவற்கு இரங்குவோம்.
நம் கண்ணுக்கு தெரிந்து உண்மையிலேயே கஷ்டப்படும் சகோதர, சகோதரிகளின் படிப்பிற்கு உதவுவோம். தான் தன் குடும்பம் என்பதோடு சிறிதளவேனும் பிறருக்கும் உதவுவோம் மனிதநேயத்தை உயிர்த்தெழ செய்வோம்.
ஆன்மீகம் என்பது வேண்டுவதல்ல, கொடுப்பது.
அன்புடன்
பிஎல்.முத்தையா

8 comments:
//நம் கண்ணுக்கு தெரிந்து உண்மையிலேயே கஷ்டப்படும் சகோதர, சகோதரிகளின் படிப்பிற்கு உதவுவோம். தான் தன் குடும்பம் என்பதோடு சிறிதளவேனும் பிறருக்கும் உதவுவோம் மனிதநேயத்தை உயிர்த்தெழ செய்வோம். ஆன்மீகம் என்பது வேண்டுவதல்ல, கொடுப்பது.//
ஆஹா.. நீங்களும் ஆன்மிகமா..? வருக.. வருக.. நண்பரே.. ஆன்மிகம் என்பதே மனித நேயத்தை மனிதர்களிடையே வளர்ப்பதுதான்.. நல்லது..
//ஆஹா.. நீங்களும் ஆன்மிகமா..? வருக.. வருக.. நண்பரே.. ஆன்மிகம் என்பதே மனித நேயத்தை மனிதர்களிடையே வளர்ப்பதுதான்.. நல்லது..//
வரவேற்புக்கு நன்றி.. ஆன்மீகத்தைப் பற்றிச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருகக்கிறேன்.. நிறைய இருக்கிறது எழுத.. பார்ப்போம்..
ஆன்மீகம்ன்னு பூந்து....
சமூகம்னு சாஞ்சு....
அப்புறமா சாமியையும்,....
சத்தியத்தையும்.....
சாக்கடையில தள்ளல்லென்னா சரீங்க!.....
அருமையான கருத்து, நல்லாச் சொல்லி இருக்கீங்க, உண்மையில் கடவுளிடம் நாம், நமக்கு, என்று கேட்டுக் கொள்ளாமல் இருக்கணும்னுதான் என் தனிப்பட்ட கருத்தும்!
//Anonymous said...
ஆன்மீகம்ன்னு பூந்து.... சமூகம்னு சாஞ்சு.... அப்புறமா சாமியையும்,.... சத்தியத்தையும்.....
சாக்கடையில தள்ளல்லென்னா சரீங்க!.....//
ஏதோ ஒரு வெறுப்பில் எழுதியிருப்பது போல் தெரிகிறது.. அப்படி எதுவும் நடக்காது. ஆன்மிகம் மட்டுமே மனிதனை மனிதனாக்கும் சக்தி வாய்ந்தது..
//கீதா சாம்பசிவம் said...
அருமையான கருத்து, நல்லாச் சொல்லி இருக்கீங்க, உண்மையில் கடவுளிடம் நாம், நமக்கு, என்று கேட்டுக் கொள்ளாமல் இருக்கணும்னுதான் என் தனிப்பட்ட கருத்தும்!//
அதேதான் மேடம்.. கடவுளைக் காணச் செல்வதே நமக்கென்று ஒரு ஜீவன் இருக்கு. கேள்வி கேட்கவும், உரிமையுடன் ஓடி வரவும் உண்டு. நம்பிக்கையோடு இருங்கள் என்பதை நமக்கு நாமே சொல்லிக் கொள்ளத்தான் என்று நான் நினைக்கிறேன்.
//
ஆன்மீகம்ன்னு பூந்து....
சமூகம்னு சாஞ்சு....
அப்புறமா சாமியையும்,....
சத்தியத்தையும்.....
சாக்கடையில தள்ளல்லென்னா சரீங்க!.....
//
தமிழ் மணத்தில் நடந்துகொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார் போல
//
ஆன்மிகம் மட்டுமே மனிதனை மனிதனாக்கும் சக்தி வாய்ந்தது..
//
நல்லா சொன்னிங்க நிறைய எதிர் பார்க்கிறோம்
இன்று ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் சொற்பொழிவாளர் திரு.
சுகிசிவம், உங்களின் இந்தக் கருத்தை
தன் பாணியில் சொன்னார்.
Post a Comment