Saturday, September 15, 2007

தனிமை - குறும்படம்

lhttp://www.youtube.com/watch?v=Zxz1thWPHkE


. 'தனிமை'
மாறிவரும் சூழ்நிலைகளில்ஆண்களும் பெண்களும் பணத்தைக் குறிவைத்து தங்களது வாழ்க்கையோடில்லாமல் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். இத்தகைய சூழலில் சென்றத் தலைமுறையினரைப் பற்றிய நினைவு ஏற்படுமா? யோசிக்கத் தக்க விசயம்தான்.

வயோதிகத்தில் தனிமையில் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படும் ஆணின் நிலையைக் குறிப்பிடும் வகையில் வந்துள்ள குறும்படம் தான் பி.எல் முத்தையா கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள 'தனிமை'. உரையாடல்கள் இல்லாமல் இரண்டரை நிமிடமே திரையில் ஒடக்கூடிய இந்த குறும்படம் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிக்கையிலடங்காது.

செட்டிநாட்டு கலாச்சார அமைப்புள்ள பெரிய வீட்டினுள் தனிமையில் தன்னுடைய வயோதிகத்தைக் கழிக்க நேரும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சொக்கலிங்கம் செட்டியார் தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளார்.

கதவு திறக்கிறது, கதவின் தாழ்ப்பாள், வீட்டின் விளக்கு முதலியவை டி அடங்குகிறது. மாத்திரை, மருந்து, மூக்குக்கண்ணாடி இவைகளைத் தொடர்ந்து வயதான சொக்கலிங்கம் காட்டப்படுகிறார். தொடர்ந்து நகரும் திரை நம்மை அவரின் இளமைக்கால புகைப்படங்கள்,மனைவி சொந்த பந்தங்கள்,வாரிசுகள், நண்பர்கள் ஆகியவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின்பால் நம்மை இட்டுச் செல்கிறது.சாப்பிடாமல் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவு, தொடர்ந்து வானத்தை வெறிக்கும் சொக்கலிங்கம் தொலைப்பேசி அழைப்பிற்கு பதில் சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து பின்பு விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கும் சொக்கலிங்கம் என்று 'தனிமை'யின் ஏக்கத்தை பலவிதங்களில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றி வாழ்ந்து வந்த தன்னுடைய மனைவி மற்றும் சுற்றத்தார் அனைவரும் தன்னைவிட்டு நீங்கிய நிலையில் பழையக் காலங்களை அசைப்போட்டபடி எத்தனை நாட்களைத்தான் கழிப்பது என்ற ஏக்கம் சொக்கலிங்கத்தின் நடிப்பில் எதிரொலிக்கிறது. அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்.

சொக்கலிங்கத்தின் இளமைக்காலப் புகைப்படத்தைக் காட்டிய இயக்குர்.உடனே தற்போதைய நிலையையும் காட்டியுள்ளவிதம் குறித்தற்குரியது. இளமைப் புகைப்படத்தில், அதற்கேயுறிய பெருமிதம் மேலுற தெரியும். அவரின் தற்போதைய நிலையில், ஆற்றாமையும்,இயலாமையும் வெளிப்படும் விதத்தில் படமாக்கியுள்ள விதம், சிறிய இடங்களிலும் தன்னுடைய கவனங்களை சிதறவிடாமல் இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்று.

தொடர்ந்து உதாசீனத்திற்கு ஆளாகும் வயதானவர்களைக் குறித்த பதிவுகள் நமது கலையுலகத்தில் மிகவும் குறைவு.'தனிமை' போன்ற பதிவுகள் இளைஞர்களின் மனோபாவத்தை மாற்றக்கூடியது. உணர்வுரீதியாக இயக்கியுள்ள பிஎல்.முத்தையாவிற்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது.


தாமரை டிசம்பர் 07 இதழில் மேற்கண்ட விமர்சனத்தை எழுதி பெருமைப்படுத்திய தீபா ஸ்ரீராம் அவர்களுக்கும்,பதிப்பித்த
ஆசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

1 comments:

said...

Excellent Mr.Muthiah. Illustrates a good view about old age. Hope it makes sense to every one that they will reach more or less the same age. Great Job. Have A Good Day. We wish you all the best for your success in life for ever.

Thanks and Regards,
V.Chockalingam.