Friday, December 28, 2007

முரளியின் காதல்

கல்யாணத்திற்கு முன் காதலியிடம்

* உன் சிரிப்பை இன்னிக்கு பூராம் பார்த்துக்கிட்டேயிருக்கலாம்...
* நீ சொன்னா கரக்டாதான் இருக்கும்...
* ஏய், இந்த முட்டைகோஸ் பொரியல் நீயா செஞ்ச நம்பவேமுடியல...
* இந்த டிரஸ்ல தேவதை மாதிரி இருக்க...
* உனக்காக 2 மணிநேரமா இந்த தியேட்டர் வாசலில் காத்திருந்தது
உன் நினைப்பால 2 நிமிசமா போயிருச்சு...
* அவசரமில்லாம பையவே வா, எனக்கு ஒரு வேலையுமில்ல...


கல்யாணத்திற்கு பின் மனைவியிடம்

* சொன்னது வாஸ்தவம்தான் அதுக்காக காலையில பல்லுகூட விலக்காம பக்கத்துலவந்து சிரிச்சா...

* என்னிக்குதான் கரெக்ட்டா சொல்லியிருக்க இப்ப சொல்றதுக்கு...

* ஏங்க உங்களுக்குபுடிச்ச முட்டைகோஸ் பொரியல் ... என்ன முட்டைகோஸ் பொரியலா கூட்டுன்னுல நெனச்சேன்...

* ஏங்க இந்த டிரஸ் நல்லாயிருக்கா...(முரளி மனதுக்குள் இந்த டிரஸோட அழகே போச்சு வெளியே) ஹா இந்த டிரஸ்கே இப்பதான் அழகு வந்திருக்கு...

* சனியனே எவ்வளவு நேரமா இந்தக்கடையில தேவுடூ காக்கறது மனுசன்னு நினச்சியா மாடுன்னு நினச்சியா...

* பராக்கு பார்த்துட்டே வர்றதப்பாரு வெட்டி ஆபீசர்ன்னா நினச்ச...

* முரளியின் காதல் நல்லபடியாகத்தான் சென்றது கல்யாணம் ஆகும்வரை,

இப்பொழுது ஆபீசை விட்டு வீட்டுக்கு போவதேயில்லை. முரளியின் கவலையெல்லாம் ஏன் இந்த ஆபீசரும் வீட்டுக்குப்போக மாட்டேங்கறார்? என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே மேனேஜரின் டேபில் மீது இருந்த போன் அலறியது, அதுவரை கடுமையாக இருந்த மேனேஜர், போனை எடுத்தார் கனிவான குரலில் கம்பெனியில ஒரு முக்கியமான மீட்டிங்,இல்லேன்னா வந்திருக்கமாட்டேனா? எப்படா மீட்டிங் முடிச்சு வீட்டுக்கு வருவேன்னு இருக்கேன், தூங்கிறாத பை டார்லிங், என்றபடி போனை டக்கென்று வைத்துவிட்டு முரளியை தேமே என்று பார்த்தார், முரளியின் மனதுக்குள் ஒராயிறம் மத்தளங்கள் ஒன்று கூடி எழுந்தது, நம்ப கேஸ்தான் இவரும் என்று நிம்மதியாய் மனதிற்குள் மகிழ்ச்சியைப் பரப்பினான்.

2 comments:

Anonymous said...

அனுபவம் பேசுகிறதோ..? எப்படியிருந்தாலும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை கதைதான் ஜன்னல் ஸார்..

பி.கு. புதுசா..? சர்வேஸன்னு ஒருத்தர் நச்சுன்னு ஒரு கதை போட்டின்னு ஒண்ணு வைச்சிருக்கார்.. அனுப்பி வைங்க..

said...

அனுபவம் ???????????