Monday, January 14, 2008
நாகரிகத்தின் பிடியில் நாணயத்தை இழக்கலாமா?
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, படித்து பட்டதாரியாவது, ஐந்திலக்க சம்பளத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்து கொண்டும், குழந்தைகளைப் பார்த்துக் கொண்டும் தன் தாய் தந்தையரை கவனித்துக்கொண்டும் வீட்டோடு இருக்கக்கூடிய ஒரு பெண்ணை மணந்து கொள்வது, அதிகபட்சம் சொந்தமாக ஒருவீடு வாங்குவது, வாழ்க்கையை இந்த அளவில் சந்தோசமாக வாழ்வது...இதுவே படித்தஇளைஞர்களின் கனவாகவே இருந்து வந்தது.
அந்நிய முதலீடுகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் படையெடுக்கத் தொடங்கியவுடன் மேற்கூறிய இளைஞனின்
கனவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டிகிரி முடிக்கிறோமோ இல்லையோ, ஆங்கிலப்புலமையிருந்தால் போதும், இருகை நீட்டி வரவேற்க நகரின் பிபிஓக்களும் தயாராகஉள்ளன.
ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு தேர்ந்தெடுக்கும் இந்த வேலைகளில் கைநிறைய சம்பளம் கிடைத்துவிடுகிறது. அவர்களின் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இந்நிறுவனங்கள் இவர்களை நிறுத்தி வைத்து வேடிக்கைப் பார்க்கின்றன. இதற்குகாரணம், வெளிநாடுகளில் இந்த வேலைகளுக்கு அளவுக்கதிகமான முதலீடு செய்ய
வேண்டும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இந்த வேலைக்கான முதலீடு குறைவே.
கல்லூரி, பள்ளிநாட்களில் ஐந்திற்கும் பத்திற்கும் பெற்றோரின் கையை எதிர்பார்த்துவாழும் இளைஞர்களின் கைகளில் அளவுக்கதிகமான பணம் கிடைக்கும்போது, அது அவர்களின் வாழ்கைப் பாதையை மாற்றி அமைக்கிறது. கூடவே ஆங்கில மோகமும் இணைந்து கொள்ள இரண்டும் சேர்ந்து அமைதியான சந்தோசமான வாழ்க்கை என்றகொள்கை மாறி, எங்கேயும் எப்போதும் சந்தோஷம் என்ற நிலைக்கு இளைஞர்கள்
செல்ல ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
தலைமுறை இடைவெளிகளும் போட்டிபோட்டுக்கொண்டு, அனுபவங்களுக்கு முக்கியத்துவம் தராத மனநிலைக்கு அவர்களைத்தள்ளுகிறது. இதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்க்கைக்காக கூறும் எந்த ஆலோசனைகளையும் காதில், போட்டுக்கொள்ளாத நிலையும் அவர்களுக்கு வந்துவிடுகிறது.
பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிகமாக செயல்படும் இந்த நிறுவனங்கள், வார இறுதியில் அநேகமாக விடுமுறை அளித்துவிடுகிறது. இதனால் நகரங்களில் 'வீக்எண்ட்பார்ட்டிகளும்' அதிகரித்து வருகின்றன.
சமூகக் கட்டுப்பாடுகளை வெட்டியெறிந்துவிட்டு, வெளிநாட்டு மோகத்தில் ஆண் பெண்வித்தியாசமின்றி பழகும் அவர்கள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவில் ஈடுபடுவதாகவும் அதன் காரணமாக கருக்கலைப்புகள் அதிகருத்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்குஇணையாக வளர்ந்து வருகிறோமோ அந்த அளவிற்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும் உயர்ந்துகொண்டே செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய கலாச்சார மாற்றங்களினால், இளையதலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சமீபகால சம்பவங்கள் உதாரணமாக உள்ளது. பெண்களும் ஆண்களும் இரவுபகல் பாராமல் தங்கள் வேலை நேரங்களை அமைத்துக் கொள்வதன் மூலம் பல பாலியல் வன்முறை மற்றும் கொலைச் சம்பவங்களும் நடந்தவண்ணம் உள்ளன. இரவில்தன்னந்தனியாக வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பெண்கள்பற்றிய செய்திகள் நம்மை கலக்கமுறச்செய்கின்றன.
மேலும் இத்தகைய பணிகளில் உள்ளவர்கள் மனரீதியான மற்றும் உடல்ரீதியான நோய்களுக்கு உள்ளாவதும் சமூக அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.
கணினி தொடர்பான இத்தகைய வேலை வாய்ப்புகளால், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைளில் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ளும் விருப்பம்இளையதலைமுறையினருக்கு இல்லாமல் போய்விட்டது. பெருகிவரும் வேலைவாய்ப்புகளால் வளரும் குழந்தைகளும் சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளவே பெற்றோர்களால் வலியுறுத்தப்படுகின்றனர். இதனால் கலைசார்ந்த அறிவினையும், அழகியல்களையும், பண்டைய மக்கள் நமக்காக தேடித்தந்த ஆனந்தங்களையும் இழந்து, உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டுகளையும், தங்கள் குழந்தமையையும் தொலைக்கும்நிலைக்கு அவர்கள் ஆளாகின்றனர்
இந்த விதமான தாக்கத்தை சமீபத்தில் தமிழில் வெளியான 'கற்றது தமிழ்' என்ற திரைப்படமும் வலியுறுத்தியது. பன்னெடுங்காலமாக இந்த மண்ணில் வேறூன்றிய தமிழால்எளிதாக பெறமுடியாத செல்வத்தையும், பதவி மற்றும் சொகுசான வாழ்க்கையையும்இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கம்ப்யூட்டர் கொடுப்பதைப் பற்றிய ஏராளமான
தமிழிலக்கிய மாணவர்களின் குமுறல் அந்தத் திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலைகளினால் வாழ்க்கைச் சூழல்களில் மாற்
றத்திற்கு உட்படுபவர்களால் பாதிக்கப்படுவது, இதில் சிறிதும் சம்பந்தப்படாதவேறொரு வாழ்க்கைச் சூழலில் வாழ நேரும் நடுத்தர வர்க்கத்தினரே, இத்தகைய்யோரது செல்வக் குவிப்பினால் ஏறும் பொருட்களின் விலைவாசி, வீட்டுவடகைகள் மற்றும் மனைகள்-கட்டடங்களின் விலைஉயர்வு போன்றவை இவர்களை நிலைகுலைய வைத்து வாழ்கையின் விளிம்பில் நிற்க வைத்துவிடுகிறது.
எதிலும் மாற்றத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் தங்களுடைய விருப்பங்களைமாற்றிக் கொள்வதன் மூலமே இத்தகைய வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்படும். சமூக அநீதிக்கு எதிராக ரெளத்திரம் பழகவேண்டிய வயதில் தீய பழக்கவழக்கங்க
ளைப்பழகுவதை விடுத்து தங்கள் நாட்டங்களை வாழ்வின் உண்மையான சந்தோஷங்களின்பால் மேம்படுத்தவும், இலக்கிய சிந்தனைகளை வளப்படுத்திக்கொள்ளவும் தலைப்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான கலாச்சாரபண்பாட்டு வாழ்வியல்களை உருவாக்கிகொள்ள முடியும்.
தீபா ஸ்ரீராம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சாமானியர்கள் சென்னைக்கு வந்து வாழ்வது கஷ்டமல்ல னால் அவர்கள் கண்ணையும் காதையும் மூடிக்கொள்ளாமல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வழியாகவோ, காப்பி ஷாப் வழியாகவோ சென்றால் ஏன்தான் இந்த ஜென்ம ம் எடுத்தமோ என்ற நினைப்பை தவிர்க்கமுடியாது.
ஜோடி ஜோடியாக நுனிநாக்கு ங்கிலம் பேசிக்கொண்டு பெரிய டப்பாவிலிருந்து பார்ப்கானை எடுத்து ஒரே இடத்தில் ஒன்றைமணிநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு, ர்யூ வாண்ட் கூல் காபி ர் ஹாட்? என்று குட்டைபனியனுடன் ஒருபெண் ஸ்டைலாக தன் ண் நண்பரிடம் கேட்க அதற்கு அந்த பையன் ஐலைக்வாட்யூலைக்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மஞ்சப்பை மாணிக்கத்தின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.தன் சட்டைபாக்கெட்டை யாரும் பார்க்காவண்ணம் திறந்து பார்த்தான், பணம் பத்திரம்பா என்று பத்து தவணை சொல்லி தன் அப்பா கொடுத்த 5 பத்து ரூபாய் தாள்கள் படபடத்தன.
இப்படிப்பட்ட காட்சிகள் மெட்ரோ பாலிட்டன் சிட்டியில் சர்வசாதரணம் இதை வெகு அழகாக கட்டுரையாக்கிய தீபா ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்
சரி, கம்ப்யூட்டர் வேண்டாம், பீபிஒ வேண்டாம், ஆங்கிலம் வேண்டாம் இன்னும் சொன்னால் மல்டிப்லெக்சில் சினிமா வேண்டாம், காபி ஷாப் வேண்டாம், குட்டை பனியன் வேண்டாம், பெண்களின் நட்பு வேண்டாம், பன்னாட்டு நிறுவனமும் அவன் தரும் வேலையும் வேண்டாம், வீக்-எண்ட் பார்ட்டி வேண்டாம், இரவில் தனியாய் செல்ல வேண்டாம், விடிந்த பின் வீடு திரும்ப வேண்டாம்.
இவை எதுவும் பத்தாண்டுகளுக்கு முன் இல்லை,
அப்போது திருமணத்திற்கு முன் உடலுறவு இருந்ததில்லையா?,
பணியில் இருந்த, பணிபுரியாத பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லையா?
ஆங்கில மோகம் இல்லையா ?
குற்றமே நடக்கவில்லையா?
ஆனால், நடுத்தட்டு குடும்பத்தில் பிறந்த எத்தனையோ பேருக்கு மேற்கூறிய அனைத்தையும் விட
இன்று பிழைக்க ஒரு வழியாவது இருக்கிறது அதை மறக்க வேண்டாம்.
இறுதியாக, ஓரு “கற்றது தமிழ்” எடுக்கவும், இன்று அதைப்பற்றி வலையெழுதவும், அன்று தொடங்கிய
ஆங்கில மோகமும், அதன் மூலமாய் கற்ற தொழில்நுட்பமும் இன்றும் தேவைப்படுகிறது.
-வீரன் விஜயன்.
//இறுதியாக, ஓரு “கற்றது தமிழ்” எடுக்கவும், இன்று அதைப்பற்றி வலையெழுதவும், அன்று தொடங்கிய
ஆங்கில மோகமும், அதன் மூலமாய் கற்ற தொழில்நுட்பமும் இன்றும் தேவைப்படுகிறது.//
ரொம்ப சரி....
அன்புடன் அருணா
//இறுதியாக, ஓரு “கற்றது தமிழ்” எடுக்கவும், இன்று அதைப்பற்றி வலையெழுதவும், அன்று தொடங்கிய
ஆங்கில மோகமும், அதன் மூலமாய் கற்ற தொழில்நுட்பமும் இன்றும் தேவைப்படுகிறது.//
ரொம்ப சரி....
அன்புடன் அருணா
Post a Comment