Saturday, August 2, 2008

ஊக்கமது கைவிடேல்




தி வேரியபில்ஸ் படப்பிடிப்பில்
கார்த்திகேய மணிகண்டன்





அர்ச்சுனனுக்கு வில்லு

ஹரிசந்திரனுக்கு சொல்லு



அதுபோல

கார்த்திகேய மணிகண்டனுக்கு

சினிமாவே சுவாசம். யதார்த்தமாய் தொலைபேசியில்தான் எங்கள் அறிமுகம் நடந்தது.என்ன பண்றீங்க என்று கேட்டபோது சவுண்ட் இன்ஞினியரிங் அண்ட் டைரக்ஷன் கோர்ஸ் படிக்கிறேன் என்று சொன்னதும் என்னுள் இருந்த சினிமா கலைஞனும் விழித்துக்கொண்டதால் பரஸ்பரம் சினிமா என்ற ஒத்த வரிசையினால் ஒரு பிடிப்பு ஏற்பட்டது


இடையில் என்னை நேரில் சந்ததித்து அவரின் 8.a.m. என்ற குறும்படத்தின் டிவிடி ஐ கொடுத்து பார்க்கச் சொன்னார். எட்டு நிமிடமே ஒடும் அந்த குறும்படம் ஒருவேலையில்லா இளஞனின் வாழ்வை எந்த வித வசனமும் இல்லாமல் காட்சி அமைப்புகளிலேயே மிக அழகாக பதிவுசெய்திருந்தார்.பார்த்ததும் கண்டிப்பாய் இவர் தமிழ் சினிமாவில் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை வந்தது.


அதற்கு அடுத்தடுத்த சந்திப்புகளில் கார்த்திகேய மணிகண்டனின் அலட்டல் இல்லாத ஆனால் விசய ஞானம் உள்ள சினிமா பார்வையை புரிந்து கொள்ள முடிந்தது.உலக சினிமா பற்றி கூடுதல் தகவல்களையும் அதைப்பார்க்கும் விதம் பற்றியும் அவர்சொல்லும் அழகே தனி.


அவரின் கதை சொல்லும் நேர்த்தியாலும் தொழில் நுட்ப அறிவாலும் கவரப்பட்ட நான்,கார்த்தி எனக்காக ஒரு குறும்படத்தை இயக்கி கொடுக்க முடியுமா? என்று கேட்டபொழுது சார் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறி மிக நிதானமாக தி வேரியபிள்ஸ் என்ற ஸ்கிரிப்டை எழுதிக்கொண்டு வந்த தந்தார்.

இதற்கிடையில் ''பெபிள்'' என்ற DVDஐ கொடுத்து,இந்த படத்தை பாருங்கள்,இந்த படத்தில் கதை சொல்லும் உக்தி முற்றிலும் மாறுபட்டது. மூன்று கண்டங்களில் நடக்கும்நிகழ்ச்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி நான்லீனியர் விதத்தில் கதை சொல்லியிருப்பார்கள் என்று சொன்னார்.



ஐயா கார்த்தி நல்ல நாள்ளேயே ஒரு English படம்கூட பார்த்ததில்ல, ஆனால் சமீபகாலமாகதான் ஒன்றிரண்டு பார்த்து ஏதோ கொஞ்சம் தேறியிருக்கேன்.திடீர்னு மூன்று கண்டங்கற, நான்லீனியர்ங்கற என்னையா இதெல்லாம் என்றேன்.

பயப்படாதீங்க சார் என்று சொல்லிவிட்டு அப்படத்தின் கதையை பத்தே நிமிடத்தில் மிக அழகாக எடிட் செய்து கூறினார்.அதற்கு பிறகு அப்படத்தை பார்த்தேன். உண்மையில்அப்படத்தின் உணர்வுகள் என்னைத் தாக்கியது.

இடையில் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.கார்த்தி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தாய் தன் பிள்ளைகள் மேல் வைத்த காதலைப்போல் அவர் சினிமாவில் வைத்த அன்பு அப்பட்டமாய் தெரிந்தது.

ஸ்கிரிப்ட் ரெடியாயிடுச்சு எப்ப சூட்டிங் வெச்சுக்கலாம் என்று நான் அவசரப்படுத்தய போதும், இல்ல சார் அவசரப்படாதீங்க செலவு குறைக்கிறதுக்கான எல்லா முயற்சியும் ப்ளான் பண்ணிட்டு உங்கட்ட சொல்றேன்.அதன் பிறகு எடுக்கலாம் என்று கூறினார்.


சொன்னபடியே செய்தும் காட்டினார்.மேலும் அந்த பர்ட்டிகுளர் ப்ராஜெட்டில் சினிமா ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அவர்களுக்கு ஒரு பயிற்சி களத்தையும் எனக்கு செலவையும் கம்மிபண்ணிவிட்டார்.

"தி வேரியபிள்" என்ற அந்த குறும்படத்தை நாங்கள் திரையிட்ட இடத்திலெல்லாம் நல்ல அங்கீகரம் கிடைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் "ஜனசக்தி" என்ற தினசரி பத்திரிக்கை இந்த குறும்படத்தை பார்த்து மிகச் சிறப்பான குறும்படம் என்று பாராட்டி கெளரவித்தது மனசுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நண்பர் ரியாஸ், அதற்குப்பிறகு நடிகர் விஜய்நடித்த "அழகிய திருமகன்" என்ற திரைப்படத்திற்கு உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்தார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இவரைப்பற்றி சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.


இந்தக் குறும்படத்தின் மூலம் ஏராளமான திறமை மிக்க இளஞர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் நண்பர் கார்த்தி.


B.E படித்துமுடித்தவுடன் வேலைக்கு செல்வோம் என்று நினைக்காமல், சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு தற்பொழுது சென்னையில் மிகப் பெரிய கட்டுமான நிலையத்தில் சூழ்நிலை காரணமாகவேலை பார்த்து வருகிறார்.ஆனால் அதையும் சிரத்தையோடு செய்கிறார்.


கிடைக்கும் இடைப்பட்ட நேரங்களில் இயக்கும் திறமையையும், ஸ்கிரிப்ட் திறமையையும்விடாமல் செய்து வருகிறார்.சுருக்கமாக சொன்னால் ஒரு கமர்சியலான, எளிமையான,உணர்வுபூர்வமான
உலக சினிமாவை, தமிழில்தரக்கூடிய இயக்குனராக வருவார் என்பதுதிண்ணம்.





கார்த்தி = யதார்த்தமான கதை
அதைப்பிரித்து திரைக்கதை ஆக்கும் திறமை
சாட் பை சாட் விஸ்வல் ட்ராயிங்
அனைவரையும் ஒருங்கினைந்து வேலை வாங்கும் திறமை
இதுவே கார்த்தி

2 comments:

said...

கார்த்திகேய மணிகண்டனுடைய எந்த படத்தையும் பார்த்ததில்லை. ஜன சக்தி இதழ் பாராட்டுகிறது என்றால், உழைக்கும் வர்க்கத்தின் அடிமட்டப் பிரச்சனை யை மைய்யமாக வைத்து படம் இருக்குமோ என்று எதிர்பார்ப்பு எழுகிறது. 'THE VARIABLES' டீம்முக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

said...

manunnukum vinnukum , ponnukum kannukum ,unnakum yennakum , yar sontham yenum keelviku bathil "The Variables" oru chamuthayathin ola kural , oru ollakuralin sandru ithu intha padathin kthai . i just loved the film , its real cool stuff starting from the story line to edit . The editor Mr.mahesh has played a major role in this film , its one of the best edits i have ever seen i9n my life . its a real cool one . hats off team "The Variables" , its a prestige to be the producer of the film .. hats off jiiii