Monday, July 7, 2008

சொல்லாத அன்பு


'இனி உங்களோட எனக்கு பேச்சுவார்த்தையே கிடையாது' 'அப்படி ஒன்றும் நாங்களும் வெக்கங்கெட்டுப்போகல உன்னோட பேசுறதுக்கு'இப்படி நம் குடுபங்களில் அம்மா-பெண், அக்கா-தங்கை, அண்ணன்-தம்பி என்று ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வருவது சகஜம். யார் முதலில் இறங்கிப்பேசுவது என்ற ஈகோவினால், தலைமுறைத் தலைமுறையாகப் பேசாமலே போய்விட்ட குடும்பங்கள் எத்தனையோ?


கோபப்பட்டு பேசுவதோ, உணர்ச்சிவசப்பட்டு பேசுவதோ தப்பல்ல,னால் அதற்குபின் சிறிதே சிந்தித்து கொஞ்சம் இறங்கிப்பேசினால் எவ்வளவோ விசயங்களை சாதிக்கலாம். 'நான்' என்னும் அகங்காரம்உறவுகளை சின்னாபின்னமாக்குகிறது. இந்த 'நான்' னால் எத்தனையோ குடும்பங்கள் கோர்ட் வளாகங்களில் சிதைந்து போகின்றன.

'என்ன லதா உன் பையன் அமெரிக்கா போயிட்டானாம்ல உனக்கென்ன பணத்துக்கு பிக்கலா பிடுங்கலா?' என்று மறைமுகமாய் ஏகப்பெருமூச்சுவிடும் தன் தங்கையை,ஏண்டி நீ அவனப் பார்த்துகிட்டமாதிரி நா கூட பாத்துக்கல, ரா பகலா கண்ணுமுழிச்சு சின்ன வயசுல அவனுக்கு வேண்டியதை நீதான் செஞ்ச அவன் இன்னிக்கு இந்த நிலமைக்கு வந்திருக்கான்னா அதுக்கு நீதான் காரணம். நீ இல்லாம ஒரு வளர்ச்சி கண்டிப்பா சாத்தியமில்லை'. என்று லதா சொல்லியிருந்தால் பிரச்சனைக்கே வாய்ப்பில்லை.


தன் இன்னொரு தங்கையிடம் லதா,'என் மகன் அமெரிக்கா போறதுக்கு இவ வயிறு எரியறா பணம் மட்டும் இருந்தா போதுமா?. எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் இந்த 2 நாளா, எழுந்திருக்க முடியாம வைரஸ் காய்ச்சல்ல விழுந்திட்டான்'. இந்த விசயம் சரியான புரிந்துகொள்ளும் தன்மையோ பக்குவமாக எடுத்துச்சொல்லும் தன்மையோ இல்லாத காரணத்தினால் விசயம் பெரிதாகி, இப்பொழுது இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையே இல்லை.


இந்த விசயம் முடிந்த பிறகு யாராவது ஒருவர் இறங்கிப் பேசியிருந்தால் அந்தக் குடும்பம் மிகச் சந்தோசமாக இருந்திருக்கும்.


ஒருவர் மேல் நீங்கள் அன்பை வைத்திருந்தால் அதை மூடிவைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை.சொல்லாத அன்பு அப்பா-மகனாக இருந்தாலும், கணவன்-மனைவியாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் தெரியாமலேயே போய் அந்த அன்பு உணரப்படாமலேயே முடிந்துவிடும். எங்கு இல்லைபிரச்சனை?.


எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும் அதைஎதிர்கொள்ளவேண்டும். நெருங்கிய சொந்தங்களில் கோபம் வந்தாலும் வெளிப்படுத்துவதும் தப்பில்லை.ஆனால் அதன்பின் சிந்தித்து சிறிதே இறங்கிப்பேசினால் அவர்கள் தங்கள் தப்பை கண்டிப்பாய் உணர்வார்கள். சொந்தமும் உயிர் பிழைக்கும்.


நம்முடைய வாழ்நாள் 100 வயது என்று கொண்டாலும் 36500 நாட்கள் மட்டுமே, ஒருவரின் வயது இப்பொழுது 30 என்று கொண்டாலும் 10950 நாட்கள் சென்றுவிட்டது. மீதம் 25550 நாட்கள்தான். இந்த குறுகிய வாழ்க்கையில் எவ்வளவுக்கெவ்வளவு அன்பை விதைக்க முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு விதைத்து விடுவோம். வாழ்வில் சுற்றம் மற்றும் நட்புடன் மகிழ்ச்சியாய் களிப்போம்.'நான்' என்ற அகந்தையை அழிப்போம்.


''அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு''


எனும் குறள் வழி வாழ்வோம்.

4 comments:

Anonymous said...

Gomen kudasai.

said...

An excellent post.
anbudan aruna

said...

thank sssssssssssss a lot Aruna

said...

அருமையான பதிவு.