Tuesday, July 15, 2008

சேரத் தமிழ்...


சேரத் தமிழ் -எர்ணாகுளத்திலிருந்து வெளிவரும் இந்த காலாண்டு தமிழ் இலக்கிய இதழ் மிகவும் அருமையாக உள்ளது. அருமையான தலையங்கம், சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இவ்விதழுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

படைப்புகள்

உயிருள்ளவையாக

இருக்கவேண்டும்

என்பதற்காகக்

குழந்தைகளையா படைப்பது? - இது ஒரு சோறு பதம்.

சமீபத்திய ஜனவரி - மார்ச் 2008 இதழைப் படிக்க நேர்ந்தது. அதில் மு.முரளீதரன் எழுதிய ''பத்தும் ஆறும் பதினேழு'' என்ற கட்டுரை மிக அருமையாக இருந்தது.

அக் கட்டுரையில் ''கடிதம் எழுதும் பழக்கமே காணாமல் போய்விட்டது. உறவையோ நட்பையோ, நேரில் சென்று பார்த்து, பேசிப்பழகி மகிழ்ந்த காலமும் என்றோ மலையேறிவிட்டது'' என்று கடிதம் எழுதும் பழக்கம் மறைந்த சோகத்தை அருமையாக பதிவு செய்திருந்தார்.

இன்னும் சிறு சிறு துணுக்குகள் வெகு அற்புதமாக மேற்படி சேரத்தமிழில் உள்ளது.

இவ்விதழின் ஆசிரியர் திரு.அ.சொ.சிவப்பிரகாசம் தமிழுக்கு தன்னால் ஆன தொண்டை எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார். நேரிய பார்வையும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.


நல்ல தமிழ் எங்கிருந்தாலும் அதை உலகுக்கு எடுத்துச்சொல்ல மிகவும் விரும்புபவர்.


உங்கள் நல்ல படைப்புகளை மின் அஞ்சலில் அவருக்கு அனுப்பிவைத்தால் சிறந்தவற்றை பிரசுரிக்க காத்திருக்கிறார்.
மின் அஞ்சல் முகவரி:
srae@satyam.net.in.

0 comments: