Saturday, July 19, 2008

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனும்...ஆனந்த விகடனும்...

இவன 2 மணிநேரம் வச்சுக்க முடியுமா?

என்று என் இல்லத்தலைவி கேட்க,

ஏம்மா?

நாங்க ரெண்டு பேரும் சுப்பையர் சத்திரத்தில் சுந்தர ராம தீட்சிதரின் இராமாயண சொற்பொழிவை கேட்க போறோம் என்றனர்.

முடியாது என்று சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாதா?

புன்சிரிப்புடன் சரி என்று தலையாட்டினேன்.


திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசன்


அப்பா..பா..பா..
திறந்த வெளியில் கிடைத்த சந்தோசத்தில் என் புத்திரன் தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து ஆனந்த கூச்சலிட்டான்.

அவனின் அளவு கடந்த ஆற்றல் என்னை,
2 மணிநேரம் இவனை எப்படி சமாளிக்கப்போகிறோமோ?
என்று பயம் கொள்ளவைத்தது.

ப்ளாட் பார்ம் டிக்கட் எடுத்துக்கொண்டு 2 வது ப்ளாட் பாரத்தில் பைய நடையைக்கட்டினோம்.

தூத்துக்குடி மைசூர் எக்ஸ்ப்ரஸ் மற்றும் அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்வரும் நேரமாதலால் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருந்தது.

என் பையனுக்கு தண்டவாளத்தைப் பார்த்ததுமே குஷி வந்துவிட்டது.கூடியிருந்த பயணிகளையும்,அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டே வந்தான்.

இரட்டை மனநிலையில் இவற்றைக் கவனித்துக்கொண்டே
வந்த நான் அங்குள்ள புத்தகநிலையத்தில் அழகுற தொங்கிக்கொண்டிருந்த புது வடிவமைப்பில் உள்ள
ஆனந்த விகடனை ஆர்வத்துடன் பார்த்தேன்...

மீதி அடுத்த பதிவில்.

5 comments:

said...

மீதியை அடுத்த பதிவில் போடுமளவிற்கு ஆ.வி யில் ஒன்றுமேயில்லை. 15 ரூ கொடுத்து ஏதோ சினிமா பத்திரிகை வாங்கியது போல் தோன்றியது.

Anonymous said...

முருகா...
அப்படி என்னையா அந்த புது
விகடன்ல இருக்கு.

Anonymous said...

விகடனைப் பார்த்தீங்க சரி
ரயில்வே ஸ்டேசன் பத்தி
பாதிதான் எழுதியிருக்கீங்க.

Anonymous said...

Very nice naration.i am also Dindigul now at u s a.u r s other articul s r also good. By Ganesh kanna

Anonymous said...

Very nice naration.i am also Dindigul now at u s a.u r s other articul s r also good. By Ganesh kanna