Wednesday, July 23, 2008

ஆனந்த விகடனை ஆர்வத்துடன் பார்த்தேன்...


புது விகடன் பளபளப்பாக இருந்த அளவுக்கு விசயம் உள்ளதாக இருக்கிறதா என்றால் ம்ம்ம்ம்... சந்தேகம்தான்.

93ம் பக்கத்தில் சாட்டடேஇரவு இளம் பெண்கள் எந்த எந்தநட்சத்திர விடுதிகளில் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டமாய்இருக்கலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தார்கள்.பிரசுரித்திருந்த படங்களும் உண்மையில் நாம் படிப்பதுவிகடன்தானா? என்ற சந்தேகம் எழுந்தது.

யூத் ஸ்பெசல் கேள்வியும் நானே பதிலும் நானே
போன்றவைகள் நன்றாய் இருந்தது.
(அதிலும் அசைவம் ஜாஸ்திதான்).

30 லிருந்து 40 வயதிற்குள் உள்ளவர்களால்குடும்ப பொறுப்புகளினால் வார,மாத பத்திரிக்கைகளைபடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது போல,இளைய தலைமுறையினரும் படிக்கும் பழக்கத்தையேமறந்துவிட்டனர்.

உணர்வுகளை கொட்டியெழுதும் கடிதங்களேஇன்றைய தலைமுறை மட்டுமல்லயாவரும் மறந்த நிலைதான் தற்சமயம் உள்ளது.

என்ன ரமேஷ்?

என்று எடுத்த எடுப்பிலேயே பெயரைச் சொல்லி விடுகிறார்கள் இருக்கும் கொஞ்சநஞ்ச சுவாரஷ்யமும்போய்விடுகிறது அலை பேசியில்.

விகடன் முற்றிலும் இளயதலைமுறையினரைசென்றடையவேண்டும் என்ற நோக்கில் லேஅவுட் முதல் விசயங்கள் வரை மாற்றியுள்ளார்கள்.

இன்டர்நெட் யுகத்தில் இருக்கும் இளயதலைமுறையினரைஇந்த புதிய விகடன் கவருமா?நடுத்தர வயதில் உள்ளவர்களையும் தக்கவைத்துக்கொள்ளுமா?

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

13 comments:

said...

நல்ல அலசல் வாழ்த்துக்கள். எனக்கு பொக்கிஷம் விகடன் ரொம்ப பிடிச்சிருக்கு

said...

எனக்கு அதன் வடிவம் (பெரிய சைஸ்) பிடிக்கவில்லை!

என் மகளை கல்யாணம் பண்ணிக்குடுத்து பாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பற மாதிரி இருந்துச்சு. விகடனை இளையதலைமுறை நல்லா வெச்சுக்கணுமே-ன்னு!

பாக்கலாம்!

said...

மாப்பிள்ளை, பாப்பிள்ளை ஆயிடுச்சு!

ஸாரி!

said...

விகடன் எப்போதுமே அதன் இயல்பான வாசகர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்றே நம்புகிறேன். ஒரு வயதிற்கு பிறகு முற்றியவர்கள் வெளியேறுவார்கள் என எண்ணுகிறேன். புதிய வாசகர்களை கவர்வதில்தான் புதிய விகடனின் வெற்றி இருக்கிறது.

said...

//புது விகடன் பளபளப்பாக இருந்த அளவுக்கு விசயம் உள்ளதாக இருக்கிறதா என்றால் ம்ம்ம்ம்... சந்தேகம்தான்.//
No doubt. There is no proper contents inside. After reading last week AV I was totally surprised. I think Times of India has taken the management :-).

Last week the entire book was printed in hi gloss paper, lets see for how long do they continue with the same paper. I feel 15 rs is bit costly .



I'm reading AV for almost last 10-12 years. I'm not sure will I continue to read it further.

said...

/*உண்மையில் நாம் படிப்பதுவிகடன்தானா?*/
எனக்கும் 93-ம் பக்கத்தை பார்க்கும் பொழுது இது தோன்றியது... சில விஷயங்கள் சொல்லப்படாவிட்டால் அல்லது சரிதான் என்று தோன்றுமாறு கூறப்படாவிட்டாலும் நன்றாக இருக்கும்.

18000 ருபாய்க்கு யார் சுடிதார் வாங்குவார்கள் என்று நாங்கள் பேசிக்கொண்ட பொழுது , நிச்சயம் விகடன் படிப்பவர்கள் அல்ல என்று ஒரு comment காதில் விழுந்தது...

said...

நான் நினைத்ததையே சொல்லி இருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

I'm also a regular reader of AV for the past 8 years ,but when i saw latest edition ,i am not very happy coz the content is very poor.also now-a days the quality is so poor,it's covering cine news majorly..eventhough i'am young,less than 30, i can't recoganise ,i am agreeying with u for the page 93.

said...

நான் இணையத்தில் படிப்பதால் புத்தக அளவைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அசைவ ஜோக்குகள் என்னையும் சிறிது சங்கடப்படுத்தியது உண்மை. எல்லா வயதிலும் வாசகர்கள் இருக்கும்போது இதைத் தவிர்க்கலாம் (நான் விகடன் படிக்க ஆரம்பித்தது ஏறக்குறைய 10 வயதில்)

said...

ஜன்னல்காரர் எனக்காக ஒரு வருட சந்தாவைக் கட்டி புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்தால், அவருடைய ஜன்னல் தளத்தின் ஒவ்வொரு பதிவிற்கும் தவறாது வந்து ஆஜராவேன்..

எப்படி வசதி..?

said...

கருத்துக்களை படித்து உங்கள்
எண்ணங்களையும் உடனடியாக
தெரிவித்த மதிப்பிற்குறிய

தாமிரா
தியாகராஜன்
அமுதா
உண்மைத்தமிழன்
பரிசல்காரன்
சரவணகுமரன்
மலர்
மற்றும் ராப்.
கியோர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.

said...

விகடனின் கணக்கு தவறாகப் போகும் என்று தான் நினைக்கிறேன்.
எல்லா வாசக தரப்பினரையும் திருப்தி படுத்தும் வேலையில் ஆனந்தவிகடன் உடனடியாக கவனம் செலுத்த வில்லையென்றால், அது தனது நெடுநாள் வாசகர்களை இழப்பது தவிர்க்கமுடியாது.
இன்னொரு முக்கியமான விஷயம்.
குமுதம் என்ன செய்ய போகிறது பார்ப்போம்..
குங்குமத்தின் உள்ளடக்கம் எவ்வளவோ பரவாயில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லித் தான் ஆகவேண்டும்.

said...

I stopped reading AV long time ago.

parisalkaaran solradhellaam romba adhigam.

AV is not the only magazine that the youth has to read as mandatory. There are various other literary magazines which need to be appreciated.