Friday, July 25, 2008

திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது...ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும்


திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது
ஆனாலும் நாகல் நகரில் அமைந்துள்ள
சுப்பையர் சத்திரம்
இன்னும் மாறாமல்
பழமையும் தொன்மையும்
ஒருங்கே அமையப்பெற்று
விளங்குகிறது

இந்த சுப்பையர் சத்திரத்திற்கு
ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு.
நல்ல ஆன்மீக அதிர்வுகள்
உள்ள இடம்
இந்த சுப்பையர் சத்திரம்.

இந்த இடத்திற்குள் நுழைந்தாலே
நம்மையும் அறியாமல்
அமைதி நம் மனதிற்குள்
குடிகொள்ளும்.

பழமை வாய்ந்த பிள்ளையாரும்
பழங்கால பட்டிய கற்களால்
ஆன திண்ணைகளும்
ஏதோ கதை சொல்லும்
ஒங்கி வளர்ந்த ஆலமரமும்
அதன் தென்றல் காற்றும்
நம்மை தாலாட்டும்.

இந்த பழமையும் பெருமையும்

வாய்ந்த இந்த இடத்தில்தான்
ஆடி ஒன்றாம் தேதி முதல்
இராமாயணச் சொற்பொழிவு
நடைபெற்றது.

கேட்போர் அனைவரையும்
தன் விசய ஞானத்தாலும்
தெய்வீகத்தினாலும்
சுந்தர ராம தீட்சிதர் அவர்கள்
இராமாயண காலத்திற்கே
சென்ற அனுபவத்தை
கிடைக்கச்செய்தார்.

சில துளிகள் இங்கே.

சுமார் 24000 சுலோகங்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ளதாம்.

லோகத்துல தசரதன் ராமர் மாதிரி அப்பா பிள்ளைய பாக்குறது ரொம்ப கஷ்டம்.ராமரைப் பார்க்காமல் தசரதனுக்கு தூக்கமே வராதாம், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ராமரை தசரதன் அழைத்தாலும் முகம் வாடாமல் தந்தையை ராமன் வணங்கி மரியாதை செய்யும் அழகே தனிதான்.

இந்த காலத்தில் அப்பா ஒரு முறை கூப்பிட்டு இந்த விசயத்தை முடித்துவா என்று கூறினாலே சும்மா சொன்னதையே சொல்லாதீங்கப்பா என்று உதாசீனப்படுத்துபவர்கள் தான் அதிகம். பதவி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இளய மகனுக்கு பதவி கொடுக்கிறேன் என்றால் இந்த காலத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் ராமன் சித்தி கைகேயின் மூலமாக தம்பி பரதனுக்கு பட்டாபிசேகம் என்பதையும், தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டாலும் சிறிதுகூட முகவாட்டமில்லாமல் அன்னையே அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நிலையிலும் தன் தந்தை தசரதரின் உடல் நலக்குறைவே அவரை மிகவும் பாதித்தது.

தனக்கு பட்டாபிசேகம் என்ற விசயத்தை பரதன் கேள்வி பட்டாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,மறுக்கிறார். இது முறையன்று என்று ராமனிடம் மன்றாடுகிறார். ஆனாலும் ராமர், பரதா... தந்தைக்குச்செய்யும் கடமையிலிருந்து தவறாதே என்று தந்தையை மட்டும் நினைத்து கவலைப்படுகிறார்.

என்னே அழகு அந்த காலங்கள், இன்றைக்கு அண்ணன் தம்பிகளிடம் இந்த நிலையைகாணமுடியுமா? அப்பா அண்ணனுக்கு மட்டும் என் 73 செல்லு, எனக்கு 1100வா? இது மட்டுமா... அவனுக்கு அண்ணாநகர்ல பிளாட் எனக்கு அரக்கோணத்திலேயா?உன் வயசுக்கு இப்படி ஒரவஞ்சன பன்னலாமா? என்று தந்தையிடம் கேட்டால் இந்த காலத்தில் அதற்கு பெயர் மரியாதை.

ராமனைத் தேடி பரதன் காட்டிற்கு வந்து எவ்வளவோ அழைத்தும் ராமர் தன் முடிவில்இருந்து மாறவில்லை. முடிவில் பரதன் அண்ணா உன் பாதுகையாவது கொடு என்று ராமரின் பாதுகையை வாங்கி தலை மேல் வைத்துக்கொண்டு நாட்டிற்கு சென்றான்.

ஆயிரம் ராமனுக்குச் சமம் பரதன் என்று வால்மீகி வர்ணிக்கிறார் ஏன்?விட்டுக்கொடுக்கும் குணமும் தர்மம் அறியும் குணமும் முறையே ராமர், பரதனிடம் இருந்துள்ளது.தன் அன்னை கைகேயின் சூழ்ச்சியால் அண்ணன் காட்டிற்குச்செல்கிறார், அதை ராமரும் ஏற்றுக்கொண்டு தம்பிக்கு முடிசூட்ட விட்டுகொடுக்கிறார்.ஆனால் பரதனோ கிடைத்தவரை லாபம் என்று எண்ணவில்லை,அண்ணா இது தர்மம் அல்ல மூத்தவர் நீங்கள்தான் அரசாள வேண்டுமென்று போராடுகிறார். இந்த குணத்திற்காகத்தான் வால்மீகி அவ்வாறு கூறினார்.

இன்னும் ஒரு விசயம்

ஆஞ்சநேயரை ராமர் என்று பார்த்தாரோ அன்றே அவரின் கஷ்டமெல்லாம் கதிரவனைக்கண்ட பனி போல் விலகிவிட்டது.அதனால் தான் நாம் ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். எந்த நாளை தொடங்கும் போதும் அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டும்,ஆஞ்சநேயரை மனதில் இருத்திக்கொண்டும் வேலையை தொடங்கினால் ஜெயம் உண்டாகும்.

கூட்டத்தில் உள்ளவர்கள் தன்னை மறந்து சுந்தர்ராமதீட்சதரின் மென்மையான காந்த குரலில் ராமாயணத்தை சுப்பையர் சத்திரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

பல ஆன்மீக பெரியவர்களால் பலமுறை ராமாயணச்சொற்பொழிவை கேட்டிருந்தாலும்சுந்தராம தீட்சதரின் கதை சொல்லும் பாணி அனைத்து தரப்பினரையும் கட்டிபோட்டிருந்தது.

கதைகளின் இடையே கிளைக்கதைகளும், கதைக்கு சம்பந்தமான தற்கால நடைமுறைகளையும் அழகுறச்சொல்லி கேட்பவர் மனங்களை சிந்திக்கச் செய்கிறார்.

எந்த நாட்டிற்கும் வந்து சொற்பொழிவை அழகுற நடத்தி கேட்பவர் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க இராமாயணம் சொல்ல சுந்தர்ராம தீட்சதரை அனுகலாம்.
அவரின் அலை பேசி எண்: 9444230084.

6 comments:

Anonymous said...

i like the naration & also nativity
of which u told the Subbier Chatram.

Anonymous said...

பழமை வாய்ந்த பிள்ளையாரும்
பழங்கால பட்டிய கற்களால்
ஆன திண்ணைகளும்
ஏதோ கதை சொல்லும்
ஒங்கி வளர்ந்த ஆலமரமும்
அதன் தென்றல் காற்றும்
நம்மை தாலாட்டும்

Anthakalathukea pona mathuri iruku.

joke try panunga........

Vijay
chennai(Kumbakonam)

said...

ஒரு காலத்தில் கேட்டது.. இராமாயணம்தான்.. வேறென்ன?

மறுபடியும் இப்ப..

இன்னிவரைக்கும் விடாம யாராச்சும் மாறி, மாறி ஒருத்தர் வந்து பேசுறாங்க.. நமக்கும் கேட்டதுதானேன்னு போரடிக்காம போய்க்கிட்டிருக்கு.. அதுதான் இதிகாசம்..

எப்பவுமே நம்மாளல முடியாத விஷயம்தான் நம்ம மனச விட்டுப் போகாதும்பாங்க.. அதுனாலதான் இராமாயணமும், மகாபாரதமும் அப்படியே நெஞ்சுல உறைஞ்சு நிக்குன்றேன்..

நீங்க என்னண்ணா சொல்றீங்க..?

//பதவி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இளய மகனுக்கு பதவி கொடுக்கிறேன் என்றால் இந்த காலத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.//

பார்த்துண்ணேன்.. உள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம வந்து உடம்பைப் புண்ணாக்கிகிடாதீங்க.. சொல்லிட்டேன்..

said...

'என் ஜன்னல்' என்று பார்த்தவுடனே நீங்களா இருக்குமோன்னு லேசா பொறி தட்டுச்சு, பேர பார்த்தவுடனே நான் நினைச்சது கரெக்ட் ஆகிடுச்சு....
என்ன அண்ணே, எப்படி இருக்கீங்க?

said...

engal veetu jannalai thiranthal enakku mattum kaatru varum,aanal 'en jannal'ai thiranthu paarthal ooruke kulirchi varugirathe eppadi????magilchi,vazhthukkal.

said...

உலகம் ஒரு கிராமம்
ஆஹா
உண்மையாகி விட்டதே

ஹரிபாஸ்கர்
மிக்க நன்றி
கண்டுபிடித்து
விசாரித்ததற்கு.

நன்றாக இருக்கிறேன்
அங்கு உன் நலம் எப்படி?

கண்ணதாசனை
எப்பொழுதும் துணைக்கு வைத்துக்கொண்டு
வாழ்வை வசப்படுத்தும் கலையை
தெரிந்துகொண்டது கண்டு
மகிழ்ந்தேன்.

தொடரட்டும்
உன்
முடிவில்லா
வெற்றிகள்.