Sunday, July 13, 2008

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில்...


திருச்சி... திருச்சி... திருச்சி... என்று அடித்தொண்டையில் கத்திக்கொண்டிருந்தான் அந்த சொகுசு பஸ்ஸின் ஏஜெண்ட்.

அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு வந்திறங்கிய ஸ்ரீராம் நேரே அந்த ஏஜெண்டிடம் திருச்சிக்கு எவ்வளவுப்பா?

அந்த நிமிடமே கிளம்புவதுபோல் கடந்த ஒரு மணிநேரமாக உறுமிக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஸ்ரீராமைப்பார்த்ததும் ஒரு ஸ்பெசல் உறுமல் உறுமி லேசாக நகர்ந்தது.

என்ன சார் நீங்க... சீக்கிரம் ஏறுங்க 350ரூபா தான் என்று அவசரப்படுத்தினான் ஏஜெண்ட்.

இடியே விழுந்தாலும் சிறிதுகூட பதற்றப்படாத ஸ்ரீராம், கொஞ்சம்கூட முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் இருந்தான்.

பாதி இட்லி உள்ளேயும் மறு பாதி இட்லி வாய்க்கு வெளியேயும் இருந்தபடி பதறிவரும் பயணிகளை ஏமாற்றி அவர்களின் பதற்றத்தையும் அவசரத்தையும் காசாக்கியே பழகிப் போன ஏஜெண்டுக்கு ஸ்ரீராமின் உணர்ச்சி காட்டாத முகத்தைப்பார்த்ததும் பார்ட்டி மிஸ்ஸாயிடுமோ என்ற பயம் கிளம்பியது.

இண்டர்நேசனல் ஏர்ப்போட்டிலேயே ப்ளைட்டில் குத்தாலம் துண்டைப்போட்டு இடம் பிடித்து பக்கதில் உள்ள பிகரிடம் தங்கமணி கடலை மிட்டாயைக்கொடுத்துவிட்டு ஏர்கோஸ்டஸ் பிகருக்கு கொடுத்த பாரின் சாக்லேட்டை அமுக்கியவன் ஸ்ரீராம்.

அதுமட்டுமல்ல லண்டனுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது தேம்ஸ் நதிக்கரையில்ஆப்பம் சுட்டு வித்து ஆயிரம் பவுண்டை அனாவசியமாய் சம்பாதித்தவன். அமெரிக்காவில்நடுரோட்டில் நுங்கு வண்டி ஒட்டி வெள்ளைக்காரிகளை அலற வைத்தவன்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நண்பர்களை டூர் கூட்டிபபோகிறேன் என்று சொல்லி 4000ரூபாய் வசூலித்துவிட்டு நண்பர்கள் நால்வரையும் குதிரை வண்டியில் ஏற்றினான்.


அதில் ஒருவன் சந்தேகத்துடன் ஏம்பபா ஏ.சி வண்டியிலேல கூட்டிப்போறேன என்றதற்கு இன்னொருவன் நல்லா பார்றா நாலாபுறமும் திறந்திருக்குல்ல,ஏதோ இந்த டூர்ல உதைக்கிதே என்றவனை குதிரைப்பக்கத்திலே உக்காந்தா உதைக்காம முத்தமா குடுக்கும் என்றான். சலனமே இல்லாமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீராம் இறங்குங்க இறங்குங்க ஸ்பாட் வந்திருச்சு என்றான்.

முதலில் குதிரை வண்டியிலிருந்து குதித்த ஒருவன் சடாரென்று மயங்கி விழுந்தான் அவனின் 95கிலோ எடை அடுத்து குதித்தவனின் காலைப்பதம் பார்க்க அந்த ஏரியாவே குலுங்க முருகா என்று அலறினான்.


மயங்கி விழுந்தவன் லேசாக திரும்பி அங்கதாண்டா வந்திருக்கோம் என்றான். குதிரை வண்டியின் முன்னால் உட்கார்ந்திருந்தவன் லேசாக எம்பிப்பார்த்தான், பார்த்த வேகத்திலே உள்ளே இருந்தவனிடம் உச்சஸ்தனியில் மாப்ளேளள...இது திருப்பறங்குன்றம்டா.. அவன் கத்திய வேகத்தில் குதிரை பயத்தில் மிரண்டு பஞ்சாய்ப்பறந்தது.

அதுவரையில் தெழுங்கு படத்தில் மட்டுமே ஸேஸ் சீன்களைப் பார்த்துப்பழகிய அவர்களுக்கு நிஜத்தில் நடக்கும் இந்த ரேசால் அவர்கள் இதயம் லப் டப் லப் டப் என்று உதறியது.


அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு குதிரை பக்கத்தில் உள்ள பாத்திரக்கடையில் அவர்களை தள்ளியது.

இப்படியாக திருப்பறங்குன்றத்திற்கு டூர் கூட்டிசென்று வாழைப்பழமும் தேங்காயும் வாங்கிக்கொடுத்துவிட்டு இந்தாங்கடா டூர் செலவு போக மீதி 2.50பைசா என்றவனை கடுப்புடன் இது உனக்கே நல்லாயிருக்கா? என்றவனிடம் என்னபண்றது குதிரை வண்டிக்கு வாடகை 250ரூபா தான்.. ஆனா குதிரைக்கு வைத்தியத்திற்கும்,வண்டி ரிப்பேர் செலவுக்கும் 3737.50பைசா ஆயிருச்சு என்று சொல்லிவிட்டு, இதற்கு பிராயசித்தமா அடுத்த மாசம் உங்க எல்லாரையும் குற்றாலம் கூட்டிட்டு போறேன் என்றதைக்கேட்டதும், அலறி ஒட்டம் பிடித்தனர்.

சார்ர்.. ஏர்ரீங்களா இல்லையா? என்ற ஏஜெண்டிடம் 50ரூபாதானப்பா திருச்சிக்கு

என்ன சார் நீங்க... படிச்சவர் நீங்களே இப்படி பேசினா எப்படி சார்... என்று இழுத்தான்.

இது சீசனே இல்லாத டைம், எப்படியும் பத்து பேர்தான் உள்ள இருக்காங்க, நா வர்றதால உங்களுக்கு லாபம்தான் என்ன சொல்ற என்றான்.

அப்படி இப்படிப் பேசி முடிவில் 100ரூபாய்க்கு ஒத்துக்கொண்டான்.
சந்தோசமாய் பஸ்ஸின் உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்து அருகே திரும்பிப்பார்த்தான், டேய் சந்தோஷ் என்று மகிழ்ச்சியாய் கத்தினான். 95கிலோ எடையுள்ள சந்தோஷ்சும் டேய் மச்சான் எப்டிடா இருக்க என்று பல கதைகள் பேசி மகிழ்ந்தனர்.

திருச்சிக்கு எவ்வளவு ரூபாடா கொடுத்த என்ற ஸ்ரீராமிடம் 350ரூபா தான் கொடுத்தேன் என்றான் சந்தோஷ்.
ஏமாந்துட்டியேடா மச்சான் நான் 100ரூபா தான் கொடுத்தேன்,


அதற்கு பிறகு ஸ்ரீராம் பேசிய எந்த வார்த்தையும் சந்தோஷ்ற்கு கேட்கவே இல்லை.

முன் சீட்டில் உள்ள ஒருவர் ஆஆஆ...என்று அலறினார் காரணம் அவர் 450ரூபா கொடுத்ததினால் என்ற விசயம் இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

0 comments: