Thursday, June 9, 2011

கேள்வி-பதில்



நம்மை காயப்படுத்துபவர்களை என்ன செய்யலாம்?

மன்னித்துவிடுங்கள்




லஞ்சம் உங்கள் கருத்து என்ன?

காஞ்சி மாகாப் பெரியவர் கூறியது இதற்க்கு பொருத்தமாய்; இருக்கும்
நியாயத்தை கூறுவது தர்மம் என்றாலும் பிறர் செய்யும் குற்றத்தை நியாயம் கேட்கிறேன்
என்று கேட்பது கூட தர்மம் ஆகாது. அதை கூறுவதால் ஆகாப் போவது ஒன்றும் இல்லை.
அனைததையும் பகவான் வசம் ஒப்படையுங்கள.;

Friday, February 19, 2010

பழைய நினைவும்... தஞ்சாவூரும்...











ஊர் சுற்றுவது என்பது ஒரு சுகமான அனுபவம்.அதுவும் நமக்கு பிடித்த ஊரில் என்கிறபோது அதன் மகிழ்ச்சியே தனி.சமீபத்தில் சரித்திர புகழ்மிக்க இராஜராஜசோழன் ஆண்ட தஞ்சைக்கு அடியேன் சென்றேன்.

வானலாவி நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம்,சரஸ்வதி மஹால்,
கரந்தை தமிழ்ச்சங்கம்,சுற்றிலும் ஒடும் ஆறுகளையும் பார்க்க பார்க்க
நம்மை
ஆயிரம் வருடங்கள் முன்னே
பிறந்திருக்க கூடாதா?
என்று மனது ஏங்கியது.

சிவராத்திரி அன்று
காலாற கரந்தையிலிருந்து சரஸ்வதி மஹாலைநோக்கிநடந்தேன்.
இராஜராஜசோழன் இந்த வழியாக தம் படைபரிவாரங்களுடன்வந்திருப்பாரோ?
அந்த காலம் இந்த வீதி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

ஹலோ பாத்துபோங்க சார் என்றபடி ஒரு ஹீரோஹோண்டா பைக்காரர்
அன்பாக ரோட்டைப்பார்த்து போகச்சொல்லி அறிவுருத்த இராஜராஜசோழன் கனவு கலைந்தது.

நினைவில் நான் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் சிவன் எம் சிந்தையை ஆக்கிரமிக்கும் வண்ணம் ருத்ர தாண்டவத்துடன் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளி என்ற விளம்பரபலகையில் அழகே உருவாக காட்சி அளித்தார்.

மேலும் அந்த இசைப்பள்ளியிலிருந்து தமிழ் வேதங்கள் என் செவியில் இன்ப வெள்ளமாய் பாய்ந்தது.




ஆர்வம் கட்டுக்கடங்காமல் போக
ருத்ரன் இசைப்பள்ளிக்குள் நுழைந்தேன். இராஜராஜசோழனின் திருவுருவப்படம் என்னை வரவேற்றது.


சுற்றிலும் சிவபெருமானின்
ஆனந்த திருவுருவப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.


அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகரின்வாசகங்கள் மனதில் பதியும் வண்ணம் எழுதப்பட்டிருந்தன.


அன்றுதான் ருத்ரன் இசைப்பள்ளியின் தொடக்கநாளாம். தமிழ் வேதங்களைப்பாடி யாகம்வளர்த்துக்கொண்டிருந்தனர்.
மனதை மிகவும் கொள்ளைகொண்டன தமிழ் வேதபாடல்கள்.சுற்றிலும் இளம் சிவனடியார்கள் கூட்டம்.

நிர்வாகி திரு இராஜராஜனிடமும் அவரின் இளைய சகோதரர் திரு அருண்குமாரிடமும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
அவ்வளவு விசய ஞானங்களை எளிமையாய் பகிர்ந்துகொள்கிறார்கள்.


இசையின் மேல் உள்ள ஆர்வத்தையும் சிவத்தொண்டில் கொள்ளும் நிறைவையும் அவர்கள் பேச்சில் அறிய முடிந்தது.



நிர்வாகவியலில் முதுநிலைப்பட்டம் பெற்ற இவர்கள் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளியைமிகச்சிறந்த இசைப்பள்ளியாக உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.



இப்பள்ளி தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை தமிழ்ச்சங்கம் அருகில்அமைந்துள்ளது.






பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்
நாவில் நூறுநூறாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்கள் ஆவரே
-திருநாவுக்கரசர்

பூவனூர்ப் புனிதரின் (சிவபெருமானாரின்)திருநாமமாகிய திருஐந்தெழுத்தினை (சிவாயநம) ஒரு கோடி வரைச்சொல்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்,

தேவர்களின் தலைவனாகிய இந்திரனைவிடப் பெருஞ் செல்வம் உடையவர்கள் ஆவார்கள்.

என்ற திருநாவுக்கரசர் பாடலுகேற்ப சிவநாமம் ஒலிக்கும் ருத்ரன் தமிழ் இசைப்பள்ளியும் பெரும் செல்வம் அடையும்என்பது திண்ணம்.


Monday, February 1, 2010

சித்தர் பூமி திண்டுக்கல்லில் பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்குஒரு ஆஸ்ரமம்....








திண்டுக்கல்
சித்தர்களும்,
ஞானிகளும் வாழும் பூமி.
இந்த திண்டுக்கல்லில் ஞானிகளும் வணங்கும்பெருமை பெற்ற பகவான் ஸ்ரீரமண மகரிஷி

1890ம் ஆண்டு தனது 11ம் வயதில் 1வருடம்
இங்குள்ள
நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்
படித்தது
திண்டுக்கல்லுக்கு பெருமை.

அந்த நாளில் மாலை வேளைகளில்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி
பத்மகிரி மலையைச் சுற்றி
ஆடிப்பாடி விளையாடி உள்ளார்.

திண்டுக்கல் கோவில் தெருவில்
அவருடைய உறவினர் வீட்டில் வசிக்கும் போதுஅடிக்கடி உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.

சிலசமயங்களில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பஉறவினர்கள் நையப்புடைந்தும் உள்ளனர்.

ஊமைத்துரை சுரங்கப் பாதையில் நண்பர்களுடன்
விளையாண்ட அனுபவத்தை பகவான் ஸ்ரீரமண மகரிஷி பின்னாளில் திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருக்கும்போது
திண்டுக்கல்லில் இருந்து வரும் அன்பர்களிடம் பகிர்ந்துகொள்வாராம்.

யூதர்கள்
உலகிலேயே மிகச்சிறந்த அறிவாளியாக
அறியப்படுபவர்கள் யூதர்கள்.
ஏன்,எதற்கு,எப்படி?என்று கேள்விகளால்
துளைக்கும்
யூதர்களே
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்
நான் யார்?தத்துவத்தில் மனம் அடங்கி
பகவானை கொண்டாடுகின்றனர்.

பகவான் பிறந்த இடம்
திருச்சுழி
பகவான் வாழ்ந்த இடம்
மதுரை
அடங்கிய இடம்
திருவண்ணாமலை
இந்த மூன்று இடங்களையும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்
வந்து பார்த்து தரிசித்து
தங்கி செல்லும்படிஆசிரமங்கள் உள்ளன.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி
வாழ்ந்து
படித்து
விளையாடிய
சிறுமலை சூழ்ந்த திண்டுக்கல்லிலும்
உலகெங்கிலும் உள்ள ரமண அடியார்கள்வந்து பார்த்து தரிசித்து தங்கி செல்லும்படி
ஒரு ஆசிரமம் அமைக்கும் பணியைபகவான் அருளால் தொடங்கி உள்ளோம்.

2009ம் வருடம் பிப்ரவரி மாதம் 1ம் தேதிஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்குபகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளிய ஸ்ரீஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக அன்பர் இல்லத்தில்நடைபெற்றது.

அதன் பிறகு பிரதி வாரம் ஞாயிற்று கிழமைதோறும்
அன்பர்கள் இல்லத்திலும்
திருக்கோவில்களிலும்
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருளியஅருணாச்சல அட்சரமணமாலையைகூட்டுப்பாராயணமாக தொடர்ந்து பகவான்அருளால் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாத கார்த்திகை நாள் அன்றும்இல்லாத ஏழை எளியவர்களுக்குஅன்னதானம் பகவான் ஸ்ரீரமண மகரிஷிஅருளால் வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும்நல்ல விசயங்களை போதிப்பதற்காகவும்ஸ்லோகங்களை கற்றுக்கொடுக்கவும் ஸ்ரீரமணாச்சல குருகுலத்தை பகவான்அருளால் நடத்தி வருகின்றோம்.

உலகமெங்கும் உள்ள
பகவான் ஸ்ரீரமண மகரிஷியின்அடியார்களின்
அன்பும், ஒத்துழைப்பும் இருந்தால்
மிகச்சிறப்பாய்
திண்டுக்கல் ஸ்ரீரமணாச்சல ஆஸ்ரமம் அமையும் என்பது திண்ணம்.

அருணாச்சலம் வாழி, அன்பர்களும் வாழி
அட்சரமணமாலை வாழி.




Wednesday, December 31, 2008

வா என் இனிய 2009



உலகில் எதுவும் புதியதில்லை


வேண்டுவதெல்லாம் செயலில் புதுமை.


செய்வதை சிறப்பாய் செய்து


நம்மை மட்டுமல்ல


நம்மை சுற்றியுள்ளவர்களையும்


முன்னேற்றி 2009ல் நாமும்


வளம் பல பெறுவோம்.

சிந்தனை செய் மனமே!



இளைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வீட்டு வாடகைக்கும்,20 சதவீதம் உணவுவகையிலும் செலவு ஆவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

இதில் இரண்டு செய்திகள் உள்ளது

1.இரண்டு வகை செலவினங்களிலேயே சுமார் 50 சதவீதம் செலவாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள்இவற்றை குறிப்பாக கவனித்து சேமிப்பை அதிகப்படுத்தினால் வளமான வாழ்வு நிச்சயம்.

2.சுறுசுறு என்று தொழில் செய்யும் ஆர்வமுள்ளவர்களா நீங்கள்? கண்டிப்பாய் உணவுத்தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் லாபங்களை அள்ளி மகிழலாம்.

Wednesday, November 19, 2008

பரத் நடிக்கும் நாட்டுக்கோழி...



சேவல்

இந்த பெயரை இப்பொழுது கேட்டால்
குலை நடுக்கம் எடுக்கிறது.

போன ஞாயிறு அன்று என்ன செய்வது என்றே தெரியவில்லை
சரிதான் என்று 2ரூபாய்க்கு வேர்கடலை வாங்கி ஓவ்வொன்றாய்
வாயில் போட்டபடி நடந்தேன்

பொதுவாகவே கிறுக்காக சுற்றும் நான் அன்று வெகு கிறுக்காக திரிந்தேன்.
கடலை தீர்ந்தவுடன் நடையை நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்,சேவல் படப்போஸ்டரில்
சிரித்துக்கொண்டிருந்த சிம்மரனைப் பார்த்தவுடன் படம் பார்க்கலாமே என்று மனம்
சொல்ல,பைக்குள் கையைவிட்டேன் ஒரு 50 ரூபாய் நோட்டும் இரண்டு 20 ரூபாய்
நோட்டும் இருந்தது.

கவுண்டர் அருகில் சென்று டிக்கெட் விலையை கேட்ட போது 2 கிலோ அரிசியின்
விலையை(கலைஞர் கொடுக்கும் அரிசியின் விலை அல்ல) அதிர்வில்லாமல் சொன்னார்கள். அப்பொழுதாவது இந்த மரமண்டைக்கு உரைத்ததா என்றால் அதுவும் இல்லை.

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் 40 படியை அனாவசியமாய்
கடந்து(எட்டாவது படிக்கும் போது ஓட்டப்பந்தயத்தில் நடந்து போனது தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வந்தது) தியேட்டருக்குள் நுழைந்தால் எண்ணி 20 பேர் மட்டுமே
இருந்தார்கள்.

அமர்ந்திருந்த சில பேர் கதவு திறந்தபோதெல்லாம் தென்னாப்பரிக்காவில் இருந்து
வந்த மனிதரைப் பார்ப்பதுபோல் வந்தவர்களை பார்த்தது வேறு திகிலடித்தது.
ஒரு வழியாக என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பின் சீட்டில் இருந்து ஓரு கை
என்னை தட்ட ஓரு மார்க்கமாக திரும்பினேன், பத்தாயிரம் சேவல்கள் ஓன்றாக கொத்தினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது தியாகுவை பார்த்த போது.

தியாகு முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு 3 வருடமாக இதோ அதோ
என்று பல திரைக்கதைகளை மிக அழகாக கூறியவர். வாங்கண்ணே இங்க வந்து
உட்காருங்க என்று அன்பொழுக கூப்பிட்டார். அவரால் அப்படி கூப்பிட முடியும்
ஏனென்றால் அவர் வாங்கியவர். அறம் செய்ய விரும்பு,றுவது சினம் என்று
என்னால் இருக்க முடியவில்லை.

சினிமாவைவிட நிஜத்தில் நன்றாக நடித்தால்தான் வாழவே முடியும் போல் இருக்கிறது.
அன்றலர்ந்த தாமரைபோல் (கஷ்டப்பட்டு) முகத்தை வைத்துக்கொண்டு அங்கவிட
இந்த சீட் வசதியாய் இருக்கு என்றபடி முன்னே திரும்பி அமர்ந்தேன்.

திரையில்
சேவல்
என்று ஓளிர்ந்தது
அதற்கு பிறகு
அதைப்பார்த்த அனைவருக்கும்
சித்தம் கலங்கியிருக்கும்
என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை.

சில காட்சிகள் நம் சித்தத்தை
கதிகலங்க வைத்துவிடுகின்றன.

எவ்வளவோ அழகான திரைப்படங்கள் சிறிய நாடுகளில் இருந்துகூட
உலகம் வியக்க தயாரிக்கப்படுகின்றன.
சமீபத்தில் ஹிந்தியில் பூத்நாத் என்று ஓரு அழகான திரைப்படம் வந்தது.
இறந்த ஓரு பெரியவரின் வி அந்த வீட்டிற்கு குடி வந்த சிறுவனின் அன்புக்கு
அடிபணிந்து தனக்கு வருத்தத்தை அளித்த ஓரே பையனை மன்னித்து ஏற்றுக்
கொள்ளும் விசயத்தை வெகு நேர்த்தியாக படமாக்கியிருந்தனர்.

சில காட்சிகளில் கண்ணீர் நம்மையும் அறியாமல் கண்களை குளமாக்கியது.
அமிதாப்பின் தேர்ந்த நடிப்பு படத்திற்கு சிறப்பு.

சேவல் புடித்த நேரம், என் நண்பருக்கு பரபரன்னு
ஓரு படம் எடுக்க சை வந்திருச்சு.
பரத் டேட்ஸ் கிடைச்சுருச்சுன்னா
படத்த ரம்பிச்சுரலாம்னு இருக்கார்.

படத்தோட போஸ்டர் டிசைன் ரெடி
பேசனுக்காக மொட்டையடிச்சிருக்காங்க கதாநாயகி
அவளுக்கு விக்கு வச்சு அசிங்க படுத்தின வில்லன
எப்டி பரத் பழி வாங்கி கதாநாயகியின் விக்க புடிங்கி தாமிரபரணி த்துல
வீசி எறிஞ்சுட்டு பேண்ட்ட கிழிச்சு தூக்கி கட்டிகிட்டு வர்றதோட படம் முடியுது.


இதுக்கு ஏங்க நாட்டுக்கோழின்னு பேரு வச்சீங்கன்னு கேட்டேன்
கதாநாயகி விக்க ஈஸியா கழட்டமுடியாதபடி வில்லன் ஓரு சொலூசனப்போட்டு
ஓட்டியிருக்கார்,அதனால பரத் ஒரு கோழிக்கடையில சோகமா உட்கார்ந்திருக்கும்
போது, அந்த கடையோட ஓனர் வடிவேலு நாட்டுகோழிய உரிக்கரதக்காக
நெருப்புல சுட்டு வாட்றார் மின்னலென ஐடியா உதிச்சு கதாநாயகி விக்க பரத்
உருச்சு எறியுறார்.

ஹா பேர்ப்பொருத்தம் அட்டகாசம்தான் போங்க
மறந்துறாம நாட்டுக்கோழிய பார்த்து மகிழுங்க.

Wednesday, October 22, 2008

பழைய வீடும்... பதிந்த விசயமும்...

சித்தப்பா,பெரியப்பா மக்களுடன் முற்றத்தில் ஓடி விளையாண்ட நாட்களையும்,மழை நாளில் முற்றத்தின் நான்கு விளிம்பிலும்வடியும் மழை தண்ணீரை பித்தளை அண்டாவில் பிடித்து மகிழ்ந்த சந்தோசமும்,தண்ணீரை முற்றத்தில் அடைத்து கப்பல் விட்டு மகிழ்ந்ததும் இந்த வீட்டில்தான்.

பழைய வீடு

பலபேர்களின் ஞாபகங்கள் பொதிந்த வீடு.அதிலொருவர்எல்லெஸ் கனீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர்கருப்பு வெள்ளையில் காவியங்கள் படைத்தவர்புகைப்படத்தில்.

முற்றைத்தை சுற்றியுள்ள அனைத்து அறைகளின் சுவற்றிலும்இவர் எடுத்த புகைப்படங்கள் மிடுக்குடன் காணப்படும்.

ஒவ்வொரு கல்யாண வீடுகளிலும்

அவர் பின்னால் மழலை பட்டாளங்களின்அணிவகுப்பு

இருந்து கொண்டேயிருக்கும்.

ஆர்வமுடன் கேமராவை பற்றி கேட்டால்

வயது வித்யாசம் பார்க்காமல்

கனீர் குரலில் சொல்லித்தருவார்.

அவரும் இருந்தது இந்த வீடு.

கன்னிஅப்பத்தா,

கல்யாணிஅண்ணன்

சேகர்

கண்ணன்

சோமுஅண்ணன்

கனகுஅய்யா

அருணாச்சலம்

ரவி

எல்லெஸ் சுப்பரமணி
இவர்களைத்தவிர பெயர் ஞாபகத்திற்கு வராத இன்னும் பலபேரை மனதில் பதித்ததும் இந்த வீடுதான்.

சினிமா காட்டி மகிழ்ந்ததும்திருமண வீட்டில் தென்னங்குறுத்தோலை பின்னி மகிழ்ந்ததும்கல்யாண வீட்டில் வினோதமான மிசினில் சுற்றி தரும் ஐஸ்கிரீமைஅடித்து பிடித்து ருசித்ததும் இந்த வீட்டில் தான்.

பலபேர் வாழ்ந்த இந்த வீடு பல கலைநயத்தை தன்னுள் கொண்டுள்ளது.அழகிய மர வேலைப்பாடுகள் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்.மேல்மாடியில் உள்ள சுவரோவியங்கள் ஒவ்வொன்றும் உயிரோவியங்கள்.

திண்ணை

முற்றம்

இரண்டாம் கட்டு

நடைப்பாலம்

பந்திக்கட்டு

தோட்டத்துடன் கூடிய கிணற்றடி கொல்லைப்புறம்.

எத்தனையோ தலைமுறைகள்

முளைத்து வேர்விட்டு வளர்ந்த இடம் இந்த வீடு.

இயற்கையின் செல்வங்களாம்தூயகாற்று,

மாசற்ற ஊரணி தண்ணீர்

மலை சூழ்ந்த கோயில் அமைந்த ஊரில்

இந்த வீடு அமைந்துள்ளது.

வாழ்ந்த வீட்டை இந்த நிலையில் பார்த்தபோதுஇனம் தெரியாத சோகம் மனதை தாக்கியது

எதைஎதையோ சாதிப்பதற்காக நாம் ஒடிக்கொண்டே இருக்கிறோம்.அழகிய நிம்மதியான வாழ்க்கை நம் காலடியில் கொட்டிக்கிடப்பதை அறியாமல்

பழைய வீடுஇன்றில்லை

ஆனால் அதில் வசித்த மனிதர்களும் எங்கள் சிறுவயது கல்லமில்லா விளையாட்டுகளும்எங்கள் மனதில் என்றும் நீங்காதிருக்கும்.



Saturday, August 2, 2008

குசேலன் ரஜினி நல்லவரா? கெட்டவரா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாகப்பா,இதுல ஒரு சீட்டெடு என்று கராத்தே மணியிடம் ரஜினி கேட்கஏங்கிட்டேயேவா என்று கராத்தே மணி கேட்க உன்னையத்தாண்டா என்று அழுத்தி சொல்லிவிட்டு,எல்லாருக்கும் நாள் குறிச்சீல உனக்கு நான் நாள் குறிக்கிறேன்டா என்றபடி ஸ்டைலாக நடந்து ஒரு உதை கொடுப்பார்.

"அன்புக்கு நான் அடிமை" அந்தப் படத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு இனம் தெரியாதபிடிப்பு அவர் மேல் ஏற்பட்டது.
ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அன்புக்கு நான் அடிமை படத்தை ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு நான்கு முறை பார்த்தேன்,அதிலும் ரஜினி போடும் மான் கொம்பு சண்டையைமறக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தவுடன் ரொம்பவும் சந்தோசமாக இருந்தது.

ரஜினியை
ஒரு தயாரிப்பாளருக்கு பிடிக்கலாம்
ஏன்?
அதில் ஒரு நியாயம் உள்ளது.
ஏனென்றால் தன்னை நம்பி வரும் தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே சம்பாதித்துகொடுப்பதால்.

ரஜினியை
ஒரு இயக்குனருக்கு பிடிக்கலாம்
ஏன்?
ஏனென்றால் ரஜினியை இயக்கிதால் கிடைக்கும் பெருமையால்.

ரஜினியை
ஒரு விநியோகஸ்தருக்கு
ஒரு தியேட்டர் அதிபருக்கு
ஒரு தியேட்டரில் உள்ள கேண்டீன் ஒனருக்கு பிடிக்கலாம்
ஏன்?
ஏனென்றால் இவர்களுக்கும் ரஜினியால் பெருமையும் லாபமும் கிடைப்பதால்.

பணத்தையும் கொடுத்துவிட்டு லாபமும் இல்லாமல் லட்சோப லட்சோபம் பேர், படித்தவர் முதல் பாமரர் வரை ரஜினியை விரும்புவதின் ரகசியம் என்ன?

காரணம்

நாம் நினைத்ததை எல்லாம் செய்து விட முடியாதுகுறைந்த பட்சம் நாம் நினைப்பதை உள்ளது உள்ளபடி பேசக்கூட தயக்கம்,பயம்.அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன சொல்லுவாரோ என்று சதாசர்வகாலமும் பிறரை நினைத்தே நம் எண்ணங்களை வெளிப்படுத்துவதே இல்லை.

நம் கண் எதிரே நடக்கும் சின்னச்சின்ன தவறுகளை தட்டிகேட்க வேண்டும் என்று மனது துடிக்கும் ஆனால் யதார்த்தம் நம்மால் முடியாது.

ஆனால்

ரஜினி திரையில் இதை எல்லாம் வெகு இலகுவாக சாதித்து காட்டுவார்.நியாயத்தை தட்டி கேட்டு அவர் விடும் பஞ்சு டைலாக்கும் அப்படியே மனதில் சென்று தங்கிவிடும்.
சராசரி மனிதனால் முடியாத எதையும் திரையில் ரஜினி சாதித்து காட்டுவதால்தான்பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கிறது.

ரஜினி
என் தைரியத்துக்கு ஒரு காரணம்
என் குரு ஸ்ரீரமண மகரிஷியைக் காட்டியவரும் அவரே
அவரின் எளிமை அனைவரையும் போல் எனக்கும் பிடிக்கும்.

"வாழ்கையில ஒன்னவிட ஒன்னு பெட்டராத்தான் தெரியும் ஆனா நமக்கு என்ன வேணும்னு நாமதான் உறுதியா தேர்ந்தெடுத்தா தான் நம்ம வாழ்கை நல்லா இருக்கும்."

ஜானி படத்தில் தீபாவிடம் ரஜினி கூறும் இந்த வசனம் மனதில் நச்சென்று பதிந்தது. உருவாக்கியவர் இயக்குனர் மகேந்திரனாக இருக்கலாம்,அது மனதில் பதிந்ததற்கு காரணம் ரஜினிதான்.வாழ்க்கைகு தேவையான நல்ல விசயங்கள் பல ரஜினி மூலமே எனக்கு கிடைத்தது.

சோர்வு வரும்போதெல்லாம்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
எங்கிட்ட மோதாத நா ராஜாதி ராஜானடா
பொதுவாக எம்மனசு தங்கம்
மை நேம் ஸ் பில்லா
என் தாயின் மீது ஆனை எடுத்த சபதம் முடிப்பேன்

இந்தப் பாடல்களை கேட்க்கும் போது எங்கிருந்துதான் உற்சாகம் வருமோ?சோர்வுக்கே சோர்வு வந்துவிடும்.

நம்பிக்கை இழக்கும் போதெல்லாம்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
சக்தி கொடு


இந்தப்பாடல்கள் காதில் விழுந்தாலே நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

எங்காவது பயணம் செய்யும்போதோ
இயற்கையுடன் ஒன்றியிருக்கும்போதோ

கண்மணியே காதல் என்பது கற்பனையோ.
பெண்மானே சங்கீதம் பாடிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது.
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்கோலம்
அடி வான்மதி என் காதலி
வெண்மேகம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும் வெள்ளைப் புறா ஒன்று
காத்தோடு பூ உரச
விழியிலே மலர்ந்தது
சகானா சாரல் தூவுதே

இந்தப் பாடல்களை கேட்டால் மனதை யாரோ மெல்லிய மயிலிரகால் வருடி விடுவதைப்போல் இருக்கும். நம்மேல் அன்பு கொண்டவர்களின் அருகில் இருக்கும் உணர்வை இப்பாடல்கள் எனக்கு தருகின்றன. என் மேல் அன்பு செலுத்துவதற்கு யாருமே இல்லை என்ற நிலை வந்தாலும் இப்பாடல்களே எனக்கு துணை என்று இருந்துவிடுவேன்.

கம்பங்கழி தின்னவனும் மன்னுக்குள்ள
தங்க பஷ்பம் தின்னவனும் இந்த மன்னுக்குள்ள

இந்த ரெண்டுவரிய கேட்டாலே வாழ்க்கையில நடக்கற கஷ்டமான விசயங்களஎளிதா எடுத்துக்க முடியும்.

ரஜினிய
அப்பமட்டுமில்ல
இப்பவும் பிடிக்குது
இப்பமட்டுமில்ல
எப்பவும் பிடிக்கும்
ஏன்னா?
அவரோட எளிமை
விடாமுயற்சிநம்பி
வந்தவர்களை கைவிடாத தன்மை
எதிரியையும் நேசிக்கும் பண்பு
அனைவரையும் மதித்து உற்சாகப்படுத்தும் தன்மை.

மொத்ததில் நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு வேண்டிய விசயங்கள்தான் இவை.

இது எளிதில் ரஜினிக்கு வசப்பட்டதால்தான், பெரும்பான்மையானவர்கள் ரஜினிக்கு வசப்பட்ட ரகசியம் இதனால் தானோ?

ஊக்கமது கைவிடேல்




தி வேரியபில்ஸ் படப்பிடிப்பில்
கார்த்திகேய மணிகண்டன்





அர்ச்சுனனுக்கு வில்லு

ஹரிசந்திரனுக்கு சொல்லு



அதுபோல

கார்த்திகேய மணிகண்டனுக்கு

சினிமாவே சுவாசம். யதார்த்தமாய் தொலைபேசியில்தான் எங்கள் அறிமுகம் நடந்தது.என்ன பண்றீங்க என்று கேட்டபோது சவுண்ட் இன்ஞினியரிங் அண்ட் டைரக்ஷன் கோர்ஸ் படிக்கிறேன் என்று சொன்னதும் என்னுள் இருந்த சினிமா கலைஞனும் விழித்துக்கொண்டதால் பரஸ்பரம் சினிமா என்ற ஒத்த வரிசையினால் ஒரு பிடிப்பு ஏற்பட்டது


இடையில் என்னை நேரில் சந்ததித்து அவரின் 8.a.m. என்ற குறும்படத்தின் டிவிடி ஐ கொடுத்து பார்க்கச் சொன்னார். எட்டு நிமிடமே ஒடும் அந்த குறும்படம் ஒருவேலையில்லா இளஞனின் வாழ்வை எந்த வித வசனமும் இல்லாமல் காட்சி அமைப்புகளிலேயே மிக அழகாக பதிவுசெய்திருந்தார்.பார்த்ததும் கண்டிப்பாய் இவர் தமிழ் சினிமாவில் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை வந்தது.


அதற்கு அடுத்தடுத்த சந்திப்புகளில் கார்த்திகேய மணிகண்டனின் அலட்டல் இல்லாத ஆனால் விசய ஞானம் உள்ள சினிமா பார்வையை புரிந்து கொள்ள முடிந்தது.உலக சினிமா பற்றி கூடுதல் தகவல்களையும் அதைப்பார்க்கும் விதம் பற்றியும் அவர்சொல்லும் அழகே தனி.


அவரின் கதை சொல்லும் நேர்த்தியாலும் தொழில் நுட்ப அறிவாலும் கவரப்பட்ட நான்,கார்த்தி எனக்காக ஒரு குறும்படத்தை இயக்கி கொடுக்க முடியுமா? என்று கேட்டபொழுது சார் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறி மிக நிதானமாக தி வேரியபிள்ஸ் என்ற ஸ்கிரிப்டை எழுதிக்கொண்டு வந்த தந்தார்.

இதற்கிடையில் ''பெபிள்'' என்ற DVDஐ கொடுத்து,இந்த படத்தை பாருங்கள்,இந்த படத்தில் கதை சொல்லும் உக்தி முற்றிலும் மாறுபட்டது. மூன்று கண்டங்களில் நடக்கும்நிகழ்ச்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி நான்லீனியர் விதத்தில் கதை சொல்லியிருப்பார்கள் என்று சொன்னார்.



ஐயா கார்த்தி நல்ல நாள்ளேயே ஒரு English படம்கூட பார்த்ததில்ல, ஆனால் சமீபகாலமாகதான் ஒன்றிரண்டு பார்த்து ஏதோ கொஞ்சம் தேறியிருக்கேன்.திடீர்னு மூன்று கண்டங்கற, நான்லீனியர்ங்கற என்னையா இதெல்லாம் என்றேன்.

பயப்படாதீங்க சார் என்று சொல்லிவிட்டு அப்படத்தின் கதையை பத்தே நிமிடத்தில் மிக அழகாக எடிட் செய்து கூறினார்.அதற்கு பிறகு அப்படத்தை பார்த்தேன். உண்மையில்அப்படத்தின் உணர்வுகள் என்னைத் தாக்கியது.

இடையில் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.கார்த்தி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தாய் தன் பிள்ளைகள் மேல் வைத்த காதலைப்போல் அவர் சினிமாவில் வைத்த அன்பு அப்பட்டமாய் தெரிந்தது.

ஸ்கிரிப்ட் ரெடியாயிடுச்சு எப்ப சூட்டிங் வெச்சுக்கலாம் என்று நான் அவசரப்படுத்தய போதும், இல்ல சார் அவசரப்படாதீங்க செலவு குறைக்கிறதுக்கான எல்லா முயற்சியும் ப்ளான் பண்ணிட்டு உங்கட்ட சொல்றேன்.அதன் பிறகு எடுக்கலாம் என்று கூறினார்.


சொன்னபடியே செய்தும் காட்டினார்.மேலும் அந்த பர்ட்டிகுளர் ப்ராஜெட்டில் சினிமா ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து அவர்களுக்கு ஒரு பயிற்சி களத்தையும் எனக்கு செலவையும் கம்மிபண்ணிவிட்டார்.

"தி வேரியபிள்" என்ற அந்த குறும்படத்தை நாங்கள் திரையிட்ட இடத்திலெல்லாம் நல்ல அங்கீகரம் கிடைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் "ஜனசக்தி" என்ற தினசரி பத்திரிக்கை இந்த குறும்படத்தை பார்த்து மிகச் சிறப்பான குறும்படம் என்று பாராட்டி கெளரவித்தது மனசுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நண்பர் ரியாஸ், அதற்குப்பிறகு நடிகர் விஜய்நடித்த "அழகிய திருமகன்" என்ற திரைப்படத்திற்கு உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்தார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இவரைப்பற்றி சொல்வதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.


இந்தக் குறும்படத்தின் மூலம் ஏராளமான திறமை மிக்க இளஞர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் நண்பர் கார்த்தி.


B.E படித்துமுடித்தவுடன் வேலைக்கு செல்வோம் என்று நினைக்காமல், சினிமா சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு தற்பொழுது சென்னையில் மிகப் பெரிய கட்டுமான நிலையத்தில் சூழ்நிலை காரணமாகவேலை பார்த்து வருகிறார்.ஆனால் அதையும் சிரத்தையோடு செய்கிறார்.


கிடைக்கும் இடைப்பட்ட நேரங்களில் இயக்கும் திறமையையும், ஸ்கிரிப்ட் திறமையையும்விடாமல் செய்து வருகிறார்.சுருக்கமாக சொன்னால் ஒரு கமர்சியலான, எளிமையான,உணர்வுபூர்வமான
உலக சினிமாவை, தமிழில்தரக்கூடிய இயக்குனராக வருவார் என்பதுதிண்ணம்.





கார்த்தி = யதார்த்தமான கதை
அதைப்பிரித்து திரைக்கதை ஆக்கும் திறமை
சாட் பை சாட் விஸ்வல் ட்ராயிங்
அனைவரையும் ஒருங்கினைந்து வேலை வாங்கும் திறமை
இதுவே கார்த்தி

Tuesday, July 29, 2008

மனதிற்கு தெரிந்தபடி..



மனதிற்கு தெரிந்தபடி
எடுத்த புகைப்படங்களை
இங்கே
தொகுத்துள்ளேன்.

தொகுத்தவைகளை
பார்த்துவிட்டு
கருத்துக்களை
தெரிவித்தால்
மகிழ்ச்சியடைவேன்.

http://www.flickr.com/photos/sri_10/

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாடியும் ஒரு பெண் இருப்பா.

நா பணக்காரனா இருகறதால சைக்கிள் கிடைக்கல
என்னடா சொல்ற?
அரசு ஏழைக்குதானடா சைக்கிள் தருது...


எங்கப்பாவுக்கு நா மரியாத தரலேன்னு எங்க வீட்ல கோபப்பட்டதால மரியாத பண்ணேன் அதுக்கு கொல வெறியோட அடிக்க வர்றாங்கடா...
ரொம்ப அநியாயமா இருக்கே? மரியாத செஞ்சதுக்கேவா?
ஆமா நா அவர் படத்துக்கு மால போட்டு ஊதுபத்தி ஏத்தில்ல மரியாத செஞ்சேன்.????



ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாடியும் ஒரு பெண் இருப்பா.
எப்டி?
ஏன்னா எவன் வெற்றி பெற்றிருக்கான்னு தெரிஞ்சுகிட்டுதான கல்யானமே பண்றாங்க.

கல்யாணத்த நெனச்சாலே வெறுப்பா இருக்கு

கல்யாணத்த நெனச்சாலே வெறுப்பா இருக்கு
டேய் மாமு ரொம்பதான் அலட்டிக்கற
ஊர் சுத்துற வெட்டி ஆபீசருக்கு யார்டா பொண்ணு கொடுப்பா?

செல்வந்தரும் சந்நியாசியும்...


ஒரு மிகப்பெரிய செல்வந்தரும் ஒரு சந்நியாசியும் காரில் பயணமானார்கள்.செல்வந்தருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது சந்நியாசியுடன் பயணம் செய்வது.தன் மனதில் இருந்த குறைகளையும் ஆன்மீகம் சம்பந்தமாக தனக்கு இருந்த சந்தேகங்களையும் சந்நியாசியிடம் கேட்டுக்கொண்டே வந்ததார். சந்நியாசியும் பொறுமையாக பதிலளித்துக்கொண்டே வந்தார்.


ஒரு திருப்பத்தில் கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. செல்வந்தரோ கடினமான வேலைகள் எதுவும் செய்து பழகாதவர். சந்நியாசி கொஞ்சமும் சங்கோஜ படாமல் அய்யா செல்வந்தரே நீங்கள் இங்கேயே இருங்கள் நான் சென்று பக்கத்தில் யாராவது உதவிக்கு கிடைப்பார்களா? என்று பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு டிக்கியை திறந்து கேனை எடுத்துக்கொண்டு சென்றார்.


அந்த இடமோ ஆள் நடமாட்டமே இல்லாத இடமாக இருந்தது. அடிக்கடி வாகனப்போக்குவரத்தும் அங்கே காணப்படவில்லை.


எப்பொழுதும் தன்னைச் சுற்றி குடும்பம், நண்பர்கள், துதி பாடுபவர்கள் என்றே பழக்கப்பட்டிருந்த செல்வந்தருக்கு முப்பதே நிமிட தனிமை வாழ்வைப்பற்றிய பயத்தைஅவரிடம் ஏற்படுத்தியிருந்தது.


முப்பது நிமிடங்கள் கழித்து வேர்வை வழிய சந்நியாசி எரிபொருளுடன் அந்த இடத்திற்கு வந்தார்.


அவரைப்பார்த்ததும் செல்வந்தர் சாமி என்னால் ஒரு அரை மணி நேரம் யாருமில்லாமல் தனிமையில் இருந்தது மிகவும் கொடுமையாய் இருந்தது.மனதில் தேவையில்லாத கற்பனைகள் எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. யாரும் பேச்சு துணைக்கு கூட இல்லாமல்,ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருப்பது இவ்வளவு கடினமானதா? என்று வினவினார்.


புன் சிரிப்புடன் சந்நியாசி, அய்யா செல்வந்தரே உன் தொழிலில் உள்ள சிரமங்களையும், வேலைகளையும் நித்தம் செய்து உங்கள் மனதை பழக்கப்படுத்தியுள்ளீர்கள்.உண்மையில் அந்த வேலைகள்தான் கடினமானவை. ஆனால் உள்முகமாக மனதை திருப்பி தனிமையில் தன்னை உணர்வது நீ செய்து கொண்டிருக்கும் வேலையைவிட கடினமானது அல்ல.


ஆர்வமும் முனைப்பும் இருந்தால் இப்பயிற்சி மிக எளிதாய் வசப்படும் .மேலும் தனிமை இனிமையானதாய் மாறும். உன்னுடைய இந்த பயிற்சி எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைக்கொடுக்கும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனது பாதிக்காது. இடைவிடாது, இடையூறு இல்லாமல் என்றுமே கிடைக்கும் இந்த ஆனந்தமும், மகிழ்ச்சியும் உனக்குள்ளேயே இருக்கிறது.


அதற்கு


தனித்திரு... விழித்திரு.


இதிலிருந்து தெரிந்துகொண்ட விசயம்

கஷ்டமான வேலைகளை எளிதாகச் செய்கிறோம்,எளிதான வேலைகளை கஷ்டமாக்குகிறோம். நம்முள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை வெளியில் தேடுகிறோம்.(இதை பிளாக்கில் பதிவது உட்பட)


நேற்று இரவு சுமார் 11 மணியளவில் நண்பர் பாலபாரதி மற்றும் நவக்குமார் ஆகியோர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்த அருமையான தகவலை உணர்வுப்பூர்வமாய் தனக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கங்களுடன் நண்பர் பாலபாரதி கூறினார். நல்ல விசயத்தை மனதில் விதைத்த நண்பருக்கு நன்றி.

பாருங்க.. ரசியுங்கள்.. அடித்தாலும் தப்பில்லை





















Friday, July 25, 2008

திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது...ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும்


திண்டுக்கல் எவ்வளவோ மாறிவிட்டது
ஆனாலும் நாகல் நகரில் அமைந்துள்ள
சுப்பையர் சத்திரம்
இன்னும் மாறாமல்
பழமையும் தொன்மையும்
ஒருங்கே அமையப்பெற்று
விளங்குகிறது

இந்த சுப்பையர் சத்திரத்திற்கு
ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு.
நல்ல ஆன்மீக அதிர்வுகள்
உள்ள இடம்
இந்த சுப்பையர் சத்திரம்.

இந்த இடத்திற்குள் நுழைந்தாலே
நம்மையும் அறியாமல்
அமைதி நம் மனதிற்குள்
குடிகொள்ளும்.

பழமை வாய்ந்த பிள்ளையாரும்
பழங்கால பட்டிய கற்களால்
ஆன திண்ணைகளும்
ஏதோ கதை சொல்லும்
ஒங்கி வளர்ந்த ஆலமரமும்
அதன் தென்றல் காற்றும்
நம்மை தாலாட்டும்.

இந்த பழமையும் பெருமையும்

வாய்ந்த இந்த இடத்தில்தான்
ஆடி ஒன்றாம் தேதி முதல்
இராமாயணச் சொற்பொழிவு
நடைபெற்றது.

கேட்போர் அனைவரையும்
தன் விசய ஞானத்தாலும்
தெய்வீகத்தினாலும்
சுந்தர ராம தீட்சிதர் அவர்கள்
இராமாயண காலத்திற்கே
சென்ற அனுபவத்தை
கிடைக்கச்செய்தார்.

சில துளிகள் இங்கே.

சுமார் 24000 சுலோகங்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ளதாம்.

லோகத்துல தசரதன் ராமர் மாதிரி அப்பா பிள்ளைய பாக்குறது ரொம்ப கஷ்டம்.ராமரைப் பார்க்காமல் தசரதனுக்கு தூக்கமே வராதாம், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ராமரை தசரதன் அழைத்தாலும் முகம் வாடாமல் தந்தையை ராமன் வணங்கி மரியாதை செய்யும் அழகே தனிதான்.

இந்த காலத்தில் அப்பா ஒரு முறை கூப்பிட்டு இந்த விசயத்தை முடித்துவா என்று கூறினாலே சும்மா சொன்னதையே சொல்லாதீங்கப்பா என்று உதாசீனப்படுத்துபவர்கள் தான் அதிகம். பதவி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இளய மகனுக்கு பதவி கொடுக்கிறேன் என்றால் இந்த காலத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் ராமன் சித்தி கைகேயின் மூலமாக தம்பி பரதனுக்கு பட்டாபிசேகம் என்பதையும், தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டாலும் சிறிதுகூட முகவாட்டமில்லாமல் அன்னையே அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நிலையிலும் தன் தந்தை தசரதரின் உடல் நலக்குறைவே அவரை மிகவும் பாதித்தது.

தனக்கு பட்டாபிசேகம் என்ற விசயத்தை பரதன் கேள்வி பட்டாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,மறுக்கிறார். இது முறையன்று என்று ராமனிடம் மன்றாடுகிறார். ஆனாலும் ராமர், பரதா... தந்தைக்குச்செய்யும் கடமையிலிருந்து தவறாதே என்று தந்தையை மட்டும் நினைத்து கவலைப்படுகிறார்.

என்னே அழகு அந்த காலங்கள், இன்றைக்கு அண்ணன் தம்பிகளிடம் இந்த நிலையைகாணமுடியுமா? அப்பா அண்ணனுக்கு மட்டும் என் 73 செல்லு, எனக்கு 1100வா? இது மட்டுமா... அவனுக்கு அண்ணாநகர்ல பிளாட் எனக்கு அரக்கோணத்திலேயா?உன் வயசுக்கு இப்படி ஒரவஞ்சன பன்னலாமா? என்று தந்தையிடம் கேட்டால் இந்த காலத்தில் அதற்கு பெயர் மரியாதை.

ராமனைத் தேடி பரதன் காட்டிற்கு வந்து எவ்வளவோ அழைத்தும் ராமர் தன் முடிவில்இருந்து மாறவில்லை. முடிவில் பரதன் அண்ணா உன் பாதுகையாவது கொடு என்று ராமரின் பாதுகையை வாங்கி தலை மேல் வைத்துக்கொண்டு நாட்டிற்கு சென்றான்.

ஆயிரம் ராமனுக்குச் சமம் பரதன் என்று வால்மீகி வர்ணிக்கிறார் ஏன்?விட்டுக்கொடுக்கும் குணமும் தர்மம் அறியும் குணமும் முறையே ராமர், பரதனிடம் இருந்துள்ளது.தன் அன்னை கைகேயின் சூழ்ச்சியால் அண்ணன் காட்டிற்குச்செல்கிறார், அதை ராமரும் ஏற்றுக்கொண்டு தம்பிக்கு முடிசூட்ட விட்டுகொடுக்கிறார்.ஆனால் பரதனோ கிடைத்தவரை லாபம் என்று எண்ணவில்லை,அண்ணா இது தர்மம் அல்ல மூத்தவர் நீங்கள்தான் அரசாள வேண்டுமென்று போராடுகிறார். இந்த குணத்திற்காகத்தான் வால்மீகி அவ்வாறு கூறினார்.

இன்னும் ஒரு விசயம்

ஆஞ்சநேயரை ராமர் என்று பார்த்தாரோ அன்றே அவரின் கஷ்டமெல்லாம் கதிரவனைக்கண்ட பனி போல் விலகிவிட்டது.அதனால் தான் நாம் ஆஞ்சநேயரை மனம் உருகிவேண்டிக்கொண்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். எந்த நாளை தொடங்கும் போதும் அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டும்,ஆஞ்சநேயரை மனதில் இருத்திக்கொண்டும் வேலையை தொடங்கினால் ஜெயம் உண்டாகும்.

கூட்டத்தில் உள்ளவர்கள் தன்னை மறந்து சுந்தர்ராமதீட்சதரின் மென்மையான காந்த குரலில் ராமாயணத்தை சுப்பையர் சத்திரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

பல ஆன்மீக பெரியவர்களால் பலமுறை ராமாயணச்சொற்பொழிவை கேட்டிருந்தாலும்சுந்தராம தீட்சதரின் கதை சொல்லும் பாணி அனைத்து தரப்பினரையும் கட்டிபோட்டிருந்தது.

கதைகளின் இடையே கிளைக்கதைகளும், கதைக்கு சம்பந்தமான தற்கால நடைமுறைகளையும் அழகுறச்சொல்லி கேட்பவர் மனங்களை சிந்திக்கச் செய்கிறார்.

எந்த நாட்டிற்கும் வந்து சொற்பொழிவை அழகுற நடத்தி கேட்பவர் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க இராமாயணம் சொல்ல சுந்தர்ராம தீட்சதரை அனுகலாம்.
அவரின் அலை பேசி எண்: 9444230084.

ஆரஞ்ச உங்க அக்காவாடா சாப்பட்டா?

ஆப்பிள் கிலோ 120ரூபாயாம்
அதுக்கு நீ ஏ கவலப்படுற மச்சான்?
இல்ல அக்காவுக்கு ரொம்ப புடிக்குமேன்னுதா...
போன வாரம் வாங்கன ஆரஞ்ச உங்க அக்காவாடா சாப்பட்டா?அக்காவுக்கு சளினாலதான் அத கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டியதா போச்சு
ஏ தியாகத்த என்னிக்கு நீங்க புரிஞ்சுகிட்டீங்க?
ஒரு அரை கிலோ ஆப்பிள் போடுங்க.
டேய்ய்ய்ய்ய்ய்......



சார் இந்த 6300 நோக்கியா என்ன விலை?
8000ரூபா
அந்த சோனி எரிக்சன்?
12000ரூபா
புளூடூத்?
இருக்கு.
கேமரா?
அதுவும் இருக்கு.
எம்.பி.3?
இருக்கு சார்
சார் கைமாத்து 1000ரூபா இருக்குமா?
அதுவும் இருக்கு (ஏதோ ஞாபகத்தில்).

பொண்டாட்டிக்கு ரொம்ப பயப்படுவேன் நீங்க?

நா நெனச்சா உன் பிசாத்து பணம் 5000த்த இப்பவேகொடுக்கமுடியும்
அப்ப கொடு
நா நெனச்சாத்தானே!


நா ஏ பொண்டாட்டிக்கு ரொம்ப பயப்படுவேன் நீங்க?
நா ஏ சார் உங்க பொண்டாட்டிக்கு பயப்படனும்.

Wednesday, July 23, 2008

சிங்கிள் டீ குடிக்க வெக்கமா இல்லையா ..

சம்பாரிக்காம சிங்கிள் டீ குடிக்க வெக்கமா இல்லையா உனக்குன்னு எங்கப்பா கேட்டுட்டார்
அப்புறம்?
வேறென்ன ரோசத்துல காபிய குடுச்சுட்டு வந்துட்டேன்.



சிக்கனமா இருந்ததுக்கு ஏ பொண்டாட்டி திட்றா
ஏன்டா?
அவ நெக்லஸ அடகு கடையில வச்சா வட்டி கூடன்னு பேங்ல வெச்சேன்.

ரீசார்ஜ் பண்ணவே முடியலடா மாப்பள..

எங்க வீட்ல கிளி மாதிரி பொண்ணு பாத்திருக்காங்க

ஏ மனுசங்க வீட்ல பொண்ணு கிடைக்கலையா?



ரீசார்ஜ் பண்ணவே முடியலடா மாப்பள

ஏன்டா?

அதுக்கு செல் வேணும்ல.

இன்னிக்கு ஒரு பேச்சு

நான் கொடுத்த 100ரூபாய இன்னிக்காவது கொடு

நாளைக்கு தர்றேன்

நேத்தும் இதேதானே சொன்ன

எனக்கு, இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது
.